உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்shimon_ciஇஸ்ரேலின் மூத்த ராஜந்திரியும் தொழில் அமைச்சர்,  பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், அதிபர் என்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவருமான  93 வயதாகும் சைமன் பிறெஸ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறெஸின் மூளை மற்றும் நரத்புத்தொகுதி  பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1948ல் இஸ்ரேல் சுதந்திரமடைந்த காலம் முதல் அதன் ஒவ்வொரு முக்கிய அபிவிருத்தி திட்டங்களிலும் அரசியல் கொள்கைத்திட்டங்களை வகுப்பதிலும் முக்கிய பங்களிப்பு வழங்கிய இவர் 70 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நெருக்கடிக்கு சமாதானத்தீர்வு காண்பதில் இவரது சேவைக்காக 1993 ம் ஆண்டு  சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கும் மறைந்த யசீர் அரபாத்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்