உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledதமிழ் மக்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஆயுதமேந்த மாட்டோம். ஆனால் எம்மை ஆளமுடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று அவரது திருகோணமலை இல்லத்தில் இடம்பெற்றது.

‘இன்றைய அரசியலும் பெண்களின் பங்களிப்பும்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து குறிப்பிட்ட அவர், புதிய அரசியல் சாசன ஆக்கத்தில் நாம் முக்கிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றோம். இம்முறை உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தின் மூலம் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு.

இதுவரை நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் சாசனமும் தமிழ் மக்களுடைய ஆதரவுடனோ சம்மதத்துடனோ கொண்டுவரப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்தின் சம்மதமில்லாமல் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது.

அந்தவகையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும்முறையான அரசியல் தீர்வை புதிய அரசியல்சாசனம் கொண்டிருக்கவில்லையாயின் அதனை நாம் நிராகரிப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்