உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்batti_boy_death01மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள ஆனந்த ஒழுங்கையில் வைத்து நேற்று இரவு 11 மணியளவில் வாகன சாரதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.சோமசிறி விஜித் ஜெயந்த் வயது 34 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மட் ட க்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், சரமாரியாக வெட்டிக்கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக ஒரு மணி நேரத்திற்குள் மட்டக்களப்பு பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சடலம் பிரேத பரிசேதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்