உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்விக்கிலீக்ஸ்’ ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ்சே சுவீடனுக்கு அனுப்பப்பட்டால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளுக்காக சுவீடனுக்கு ஜூலியன் அஸேஞ்சை அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே அவரது சட்டத்தரணிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜூலியன் அஸேஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அந்நாட்டு இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது சட்டத்தரணியான ஜியோப்ரி ரொபேர்ட்ஸன் கூறினார்.

மேலும் சுவீடனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஸேஞ்சே (39 வயது) மறுப்பு தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள பெல்மார்ஷ் நீதவான் நீதிமன்றில் ஜூலியன் அஸேஞ்சே தொடர்பான இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜூலியன் அஸேஞ்சே சுவீடனிலிருந்து நாடு கடத்தப்படமாட்டார் என்பதை சுவீடன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டுமேன அஸேஞ்சேவின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்