உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பலதரப்பட்ட தரப்பினரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தமது விடுதலையை வலியுறுத்தி இன்று மீண்டும்  அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளே இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தம் மீதான வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றி, விசாரணையை துரிதப்படுத்தி, தம்மை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக  தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் பல தடவை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில், ஒரு சிலரே விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில், கடந்த மாதம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை குறித்து வலியுறுத்தியதோடு, இம்மாதம் மீள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்