உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்625_0_560_350_160_300_053_800_668_160_90மத்திய பிரதேசத்தில் ஒபாமாவின் கையெழுத்தில் மோசடி செய்து நாசாவில் பணிபுரிவதாக எமாற்றி சுற்றிக் கொண்டிருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அன்சார் கான் (20). இவர் தான் பயின்ற பள்ளியில், நான் நாசாவில் பணிபுரிவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, இவருக்கு பள்ளியின் சார்பாக பாரட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யபட்டது.இந்த பாராட்டு விழாவுக்கு முக்கிய பிரமுகர்களுடன் போபால் நகர காவல்துறையில் பணிபுரியும் சசிகாந்த் சுக்லாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பாரட்டு விழாவில் கலந்து கொண்ட சசிகாந்த், அன்சார் கானுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.பின்பு அவர் நாசாவில் பணிபுரிவதற்கான அடையாள அட்டையை பார்த்த சசிகாந்த்க்கு ஒபாமாவின் கையெழுத்தில் ஏதோ சந்தேகம் எழ அதனை விசாரிக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, விசாரனை மேற்கொண்டதில், அன்சார் நாசாவில் பணிபுரிவதாக வைத்துள்ள அடையாள அட்டை போலி எனவும், ஒபாமாவின் கையெழுத்தை வைத்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து, அன்சார் கானை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்