உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivetதிருகோணமலை, கிண்ணியாப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டலடியூற்றுப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியிலிருந்து திருகோணமலை நகர் நோக்கி மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த வடி ரக வானும் ஆலங்கேணிப் பகுதியிலிருந்து கண்டல்காட்டுப் பகுதிக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சந்திரலிங்கன் யுகன் (வயது 29) என்பவரே பலியானார்.கண்டல்காட்டுப் பகுதியிலுள்ள மாட்டுப் பட்டியிலிருந்து பால் எடுத்து வருவதற்காக சென்றபோதே இவர்  விபத்துக்கு உள்ளாகிப் பலியாகினார்.  வானில் சென்றோரே காயமடைந்துள்ளனர்.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்