உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்1-10-2016%2010_10_0%202கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில்  இன்று அதிகாலை (01-10-2016) புகையிரதத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்துடன் கிளிநொச்சி பாரதிபுரம் 155 ஆம்  கட்டைப்  பகுதியில் காளி கோவிலுக்கு அருகில் புகையிரத பாதையில் இச்சம்பவம் இடம்பெற்று ள்ளது.

இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்