Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



jaffnயாழ் ஸ்ரான்லி வீதியில் புகையிரத நிலையம் எதிரே இருந்த வர்த்தக நிலையத்தில் நின்றவர்கள் மீது நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த சம்பவத்தில் அத்தியடியைச் சேர்ந்த புவிதன் , கோபிதன் , அஜந்தன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் புகையிரத நிலையம் எதிரே இருந்த ஓர் சில்லறை வியாபார வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரன் உள்ளிட்ட நால்வர் மீது நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து எழுப்பிய அவலக் குரல் கேட்டு அயலவர்கள் ஓடி வந்தவேளையில் தாக்குதல் தாரிகள் தப்பியோடிவிட்டனர். இதன்போது தாக்குதலுக்குள்ளான மூவர்மீது வாள்வெட்டும் ஒருவர் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் இருந்து உதவி கோரியதையடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான மூவரும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தையடுத்து வெட்டுக்கு இலக்கான இளையர்களின் இறவுகள் வைத்தியசாலையில் குவிந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டனர்.

வாள் வீட்டில் ஈடுபட்டவர்கள் என கருதப்படுபவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதல் தாரிகளை பொலிசார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்