உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து கட்சியில் இருந்தும் நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசாங்கம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் போராட்டத்தின் பின்னர், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த விடயம் தொடர்பில் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எழுக தமிழ் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்களே அதிகளவில் கலந்து கொண்டதாகவும் வடக்கு மக்கள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரன் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்