உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledபாகிஸ்தான் மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர்.நாடு முழுவதும் உஷார். காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 18–ந்தேதி நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த வாரம் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘சர்ஜிகல்’ தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இந்திய ராணுவத்தின் இந்த பதில் நடவடிக்கையால் பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் அந்த நாட்டு ராணுவம் அல்லது பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் நோக்கில் நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ராணுவம் குவிப்பு

மேலும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளதுடன், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க குஜராத், மராட்டிய மாநில கடற்பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் கடலோர காவல் படையினர் ஊடுருவல் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. சந்தேகத்துக்கு இடமான வகையில் கடலில் ஏதேனும் படகுகள் தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறு இந்திய மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.‘சமுத்ரா பவக்’ கப்பல்

இந்தநிலையில் குஜராத் மாநில கடற்பகுதியில் கடலோர காவல் படையின் ‘சமுத்ரா பவக்’ கப்பல் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது சுமார் 10.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த மர்ம படகு ஒன்று அந்த வழியாக வந்தது கண்டறியப்பட்டது.உடனே கப்பலில் சென்று அந்த படகை சுற்றி வளைத்த வீரர்கள், அதை சிறைப்பிடித்தனர். பின்னர் படகில் சோதனையிட்ட போது அதில் 9 பேர் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அந்த படகையும், அதில் இருந்தவர்களையும் போர்பந்தருக்கு கொண்டு சென்ற கடலோர காவல் படையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில் படகில் இருந்த 9 பேரும் பாகிஸ்தான் மீனவர்கள் என கண்டறியப்பட்டதாக தெரிகிறது. எனினும் தொடர்ந்து அவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தி வருவதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்

 

முன்னதாக காஷ்மீரின் ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புராவில் அமைந்துள்ள ராணுவ ஹெலிபேடு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிந்ததை பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர். உடனே அவரை சுற்றிவளைத்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பாகிஸ்தானின் அஸ்திலியா கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் சுகாக் என்று தெரியவந்தது.இதைப்போல பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட சவுஜியான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சுற்றித்திரிந்த 41 வயதான ஒருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஹவேலி மாவட்டத்தை சேர்ந்த முகமது ரஷித் கான் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்