Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



antoniyo%20crose_ciஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு போர்த்துக்கலின் முன்னாள் பிரதமர் அன்டானியோ குட்ராஸ் தெரிவு செய்யப்பட உள்ளார்.கடந்த பத்து ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வருகின்ற பான் கீ மூனின்  பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய செயலாளராக 67 வயதான குட்ராஸ் நியமிக்கப்படக்கூடிய அதிகளவு வாய்ப்புக்கள் காணப்படுவதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் பொதுச் செயலாளர் தெரிவு குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல முக்கிய நடவடிக்கைகளில் குட்ராஸ் பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்