உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்1830111954boy2ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலுகுண்டா கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பரூக். இவன் பள்ளி விடுமுறையையொட்டி சிந்தாகுண்டா வாலைபள்ளியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று இருந்தான்.அங்குள்ள சிறுவர்களுடன் பரூக் கண்ணாமூச்சி விளையாடினான். அங்குள்ள இரண்டு வீட்டின் சுவரின் நடுவில் ஒளிந்து கொள்ள சென்றான்.

சிறிய இடைவெளியே உள்ள சுவரில் பரூக் நுழைந்தபோது அவனது உடல் சுவர் இடுக்கில் சிக்கி கொண்டது. இதனால் அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் கூச்சல் போட்டும் யாருக்கும் கேட்கவில்லை.பரூக்கை காணாததால் உறவினர்கள் தேடினார்கள். 3 மணி நேரத்துக்கு பிறகுதான் அவன் சுவரின் நடுவில் சிக்கி இருப்பது தெரிந்தது.

கிராம மக்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் அவன் சுவரின் இடுக்கில் நன்றாக சிக்கி கொண்டதால் மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுவர் இடைவெளி மிகவும் சிறியதாக இருந்ததால் ஒரு வீட்டின் சுவரை டில்லர் கருவி மூலம் உடைத்து சிறுவனை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி மீட்டனர். அவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்