உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உள்நாட்டுப்போர் நடந்து வருகிற சிரியாவில், துருக்கி எல்லையில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உடலில் கட்டி வந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். பலத்த சத்தத்துடன் அந்த குண்டுகள் வெடித்து சிதறின.இந்த தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், பலர் காயம் அடைந்தனர்.நேரில் கண்ட 2 பேர் இந்த தற்கொலைப்படை தாக்குதலை உறுதி செய்தனர்.இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற சிரியா மனித உரிமை கண்காணிப்பகம், சிரியாவில் ஆட்மே பகுதியில் நடந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது குண்டுவெடிப்பா என தெரியவில்லை என கூறுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.இருந்தபோதும், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான ஒரு செய்தி நிறுவனம், கிளர்ச்சியாளர்களின் வாகன அணிவகுப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்