உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த திருமதி  நாகரத்தினம் சுந்தரலிங்கம்  அவர்களின் மறைவு குறித்த நன்றி நவிலல்

                                                                வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தீரன்றோ! 
                                                                   தெய்வத்துள் இருந்தெம்மை தேற்றுவீரே!
எங்கள் குடும்பத்தலைவியின் மறைவினால்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியவில்லை. ஆனால் இந்தக் கடினமான நேரத்தில் அனைவரும் தெரிவித்த அன்பான ஆறுதல் வார்த்தைகள்  எங்களுக்குப் பலத்தைத் தருகிறது.
எங்கள் குடும்பத்தலைவியின் மறைவினை  அறிந்த உடனே  நேரிலும், மற்றும் தொலைபேசி மூலமாகவும் எம்முடன் துயர் பகிர்ந்து அனுதாபத்தை தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள்,நண்பர்கள், ஊரவர்கள், இணையத்தளங்கள் முகநூல் மூலம் அனுதாபம் தெரிவித்தோர் ,அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டோர், பத்திரிகைகள் ,தூர இடங்களில் இருந்து வந்து இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோர் ,உணவுகளை தயாரித்து வழங்கியவர்கள், இறுதிக்கிரியைக்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியவர்களுக்கும் ,இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும்,கல்வெட்டை சிறந்த முறையில் அச்சிட்டு வழங்கிய அச்சகத்திற்கும்   என அனைத்து தரப்பினருக்கும்  கண்ணீர் அஞ்சலி ஊடாக  எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 
தகவல் குடும்பத்தினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்