உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினரின் உதவியையும் நாடியுள்ளனர். சட்டவிரோதமான வழிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க வேண்டுமெனக் கோரி மீனவர்கள் நேற்றைய தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதியில் பயணித்த சில வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விசேட அதிரடிப்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மன்னார் அரிப்பு பிரதேசத்தில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் வீடு ஒன்றினுள் உடபுக முற்பட்ட வேளை அவர்  மக்களால் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதனால் கடற்படையினர் அப்பிரசே மக்கள் மீது ஆத்திரத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்