உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கேமரூன் நாட்டில் ரெயில் தடம் புரண்டு நேரிட்ட கோர விபத்தில் 55 பேர் பலியாகினர். 575 பேர் காயம் அடைந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடு கேமரூன். அங்கு தலைநகர் யாவுண்டே நகரில் இருந்து துறைமுக நகரான டாவுலா நகருக்கு நேற்றுமுன்தினம் காலை ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. வழக்கமாக 600 பேர் பயணம் செய்யும் ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர்.

இந்த ரெயில், எசேகா நகர் அருகே உள்ளூர்நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு (இந்திய நேரம் பகல் 3.20 மணி) சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராமல் தடம் புரண்டது. அதிலும் பெட்டிகள், தண்டவாளத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு கீழே கவிழ்ந்தன. ரெயில் தடம்புரண்டபோது பலத்த சத்தம் எழுந்ததால் பயணிகள் அலறியடித்தனர்.

55 பேர் பலி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மீட்பு பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டது.

ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து துண்டித்து, கீழே விழுந்து கிடந்தது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இந்த கோர விபத்தில் 55 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 575 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.கூட்ட நெரிசல்பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள். அவர்களது உடல்கள், ரெயில் பெட்டிகளை வெட்டி எடுத்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த ரெயில் விபத்து குறித்து அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி எட்கார் அலாய்ன் மெபே நேற்று கூறுகையில், “இந்த ரெயில் விபத்தில் 55 பேர் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்” என்றார்.

விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்து, சாலையில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து சாலை போக்குவரத்து பாதிப்புக்குள்ளானதால், அந்த தட ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.பத்திரிகையாளர் தகவல்

விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, “ரெயிலில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. நான் திரும்பிப்பார்த்த போது ரெயில் பெட்டிகள் கவிழ்ந்ததை கண்டேன். பெரிய அளவில் புகையும் எழுந்தது. ரெயில் புறப்படுவதற்கு முன் யாவுண்டே ரெயில் நிலையத்தில் வைத்து ரெயில்வே அதிகாரி ஒருவர், இந்த ரெயிலில் வழக்கமாக 9 பெட்டிகள் இருக்கும்.

இப்போது கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்” என தெரிவித்தார்.இந்த விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்