உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் நிர்வாக ஊழியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியாத வாறு வாயிற் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவர் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை யென தெரிவித்தே கற்றல் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு அரச அதிகாரிகளும் தம்மை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளவில்லையெனவும் மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமினாதன் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள் ஒன்றியம் மற்றும் பீடாதிபதிகளை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்