உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்14914621_1477401058941913_315376569_n-338x450கோண்டாவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள்  நேற்று திங்கட்கிழமை இரவு உட்புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்தவர்கள் வெட்டுவதற்காக துரத்தியதுடன், உணவத்திற்குள் இருந்த பொருட்களையும் வெட்டி நாசம் செய்துள்ளது.ஒரு மோட்டார் சைக்கிலில் முகங்களுக்கு கறுப்பு துணியினை கட்டிக் கொண்டு வாள்களுடன் வந்தவர்களே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு வந்த அவர்கள் முதலில் உணவத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு நடத்த முற்பட்டுள்ளனர். இருந்த போதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்னர்.

இருப்பினும் தப்பித்து ஓடியவர்களை துரத்திச் சென்ற வாள்வெட்டுக் கும்பவல் அவர்கள் ஒருவரும் தங்களிடம் மாட்டிக் கொள்ளாத நிலையில் மீண்டும் வந்து உணவத்தினர் இருந்த பொருட்களை வெட்டி நாசம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த போதும், அரை மணித்தியாலங்களை தாண்டியே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, வாள்வெட்டுக் கும்பலை தோடி சோதணை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்