தமிழில் எழுத
பிரிவுகள்


unavngivet-tilekiuபணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் புதிய அன்னதான சபை
———————————————————————

2016 மகோற்ஸவ அன்னதான வரவு செலவு அறிக்கையின் சாரம் .
—————————————————————————-
வரவு .

2015 அன்னதான மீதிப் பணம் 271612.85 இல் இருந்து வே .பாலசுப்பிரமணியம் ஐயாவினால் தற்காலிக குழுப் பொறுப்பாளர் திரு .க .சபாநாயகம் அவர்களிடம் கையளித்த பணம் .250000 ரூபா .
தற்காலிக குழுவிடம் இவ் வருட அன்னதானத்துக்கு அடியார்களால் வழங்கப் பட்டபணம் 564800 ரூபா .
புதிய அன்னதான சபையிடம் இவ் வருடம் அடியார்கள் வழங்கிய பணம் 407500 ரூபா .
மீதிப் பொருள் விற்று வந்த பணம் 94165 ரூபா .
மொத்தவரவு 1316465 ரூபா

செலவு

தற்காலிக குழு செய்த செலவு (1–9)திருவிழாக்கள் 45 2128 ரூபா
புதிய சபை செய்த செலவு 446756 ரூபா (10-15 ம் பூங்காவனமும் )
இவ்வருட வாங்கி வைப்பு407000 ரூபா .
கையிருப்பு 10581 ரூபா .

விரிவான அறிக்கை புலம் பெயர் அன்பர்களுக்கு அனுப்பி வைக்க முடியாமைக்கு வருந்துகின்றோம் .முடிந்தவரை நேரில் வருபவர்களிடம் அனுப்பி வைக்க உள்ளோம் .

அன்னதான சபை சார்பில்
ஆ .த.குணத்திலகம்
பொருளாளர் .

10 Responses to “பணிப்புலம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் அன்னதான சபை அறிவித்தல்”

 • Naikeran:

  ஊரைக் குழப்புபவன் கள்ளன் – அதை
  உருவாக்கி விடுபவன் கொள்ளைக்காரன்

  நசுக்கிடாமல் அவனை
  உசுப்பேத்தி விடுபவன்
  நாறலை மணந்து மகிழ்கின்ற நரி

  ஏனென்றே தெரியாமல் – இவர்பின்
  எடுபட்டுப் போபவன் ஏமாளி

  பேரைக்கெடுப்பவன் பிச்சைக்காரன் – அவனுக்கு
  வக்காலத்து வாங்குபவன் பிற்போக்கு முட்டாள்

  நல்லதை எதிர்ப்பவன் காரிய விசரன்
  நாறலைப் போற்றுவான் நாயிலும் கடையன்

  • vadivelan:

   ஒண்டும் விளங்கேல்லை அன்னை ,கொங்சம் விளங்கச் சொல்லுங்கோவன் .

 • mohan:

  ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன்
  ஏமாற்றிக்கொண்டே இருப்பான் என்பதற்கு சிறந்த உதாரணம் இங்கேயே நடைந்தேறியுள்ளது.
  வே .பாலசுப்பிரமணியம் ஐயா மழைக்குக் கூட
  பாடசாலைத் தாவரம் ஒதுங்காதவர். இவர்
  க.பொ.த சாதரணம் படித்து சித்தியடையாத
  தற்காலிக குழுப் பொறுப்பாளர் திரு .க .சபாநாயகம் அவர்களையே
  ஏமாற்றி உள்ளார் எனறால் ……முடிவு உங்களிடம்

  • Pan kuruvi:

   Vedunka pilaikkaddum.avankalum paavam thaanea.avankal poora eadam eallaam neenka pelai kandu pedechchaal.ana seirathu.

  • jegatheeswaran:

   இது என்ன முதல் தடவையா ஒவ்வொரு வருடமும் செய்து கொண்டு வாரோம் நாங்கள் இதுக்கு என்ன உணாச்சி வசப் படுகிறீர்கள் மக்களே. ஏமாற்றிக்கொண்டே இருப்பான் என்பதற்கு கோயில் தர்மகத்தாக்கள் பணிப்புலம் உதாரணம்.
   நீங்கள் திருந்துவது என்றால் அடுத்த வருடம் முதல் திருவிழாக்கு போங்கோ கும்பிடுங்கோ வாங்கோ அம்மச்சிலாச்சி கும்பிடுங்கோ வாங்கோ நன்றி வணக்கம்.
   ஜெகதீஸ்வரன்

   • Akilan:

    மிகவும் சரியான உபதேசம் உங்களுக்கு கோடி நன்றிகள் அனால் யார் கடைபிடிப்பர்

 • akilan:

  காந்தனே 21612.85 இது தெரிந்த கொள்ளை இன்னும் தெரியாத கொள்ளை எவ்வளவு. இதற்ககத்தான் இவர்களுக்குள் சண்டை போடுகிறார்கள். மக்கள் திருந்தும் வரை இவங்கள் கொள்ளை அடித்துக்கொண்டு இருப்பர்கள். இவங்களை சமுதாயத்தில் மதிக்கவே கூடாது.

 • kaanthan canada:

  உங்கள் கணக்கில் ஒரு வினா .

  பாலசுப்பிரமணியம் ஐயா தந்த பணத்தின் மீதி 21612.85 சத்தம் எங்கே ?

  • Akilan:

   நீங்கள் விளங்காமல் கதைக்கிறீர்கள். இந்த ஐயர் கள்ளன் பொருளாளரிடம் 21612.85 கொடுக்கவில்லை. அவன் இதை விழுங்கிவிடடான். சரியாக கணக்கு பார்த்தால் இது 2 லச்சமாக மாறியும் விடும். இந்த பொருளாளரும் தன்னுடைய நட்பெயருக்கு களங்கம் ஏட்படுத்த போகிறார்; இந்த அலி பாபாக்களை திருத்த முடியாது. இவங்கள் களவில் கை தேர்ந்த ஆதீன கள்ள கர்த்தாக்கள்

   • kunathilagam santhai:

    தம்பி அகிலன் ,காந்தன் ,நான் சொல்வதைக் கொஞசம் நிதானமாகக் கேளுங்கள் .இந்த 250000 ஆயிரமும் என்னிடம் தரவில்லை .தற்காலிக பொறுப்பாளர் சபாநாயகத்திடமே கொடுத்தார் .சபாநாயகம் என்னிடம் தந்த பணத்துடனேயே என் கணக்கு ஆரம்பம் .சபாநாயகம் என்னிடம் தந்த பணம் 362672 ரூபா .
    ஆனால் 2015 கணக்கறிக்கையில் குறிப்பிடட மீதி வங்கி வைப்பு271612.85 சதம்என இருந்தது .சில வேளை இது 2015 அன்னதானம் நடாத்தியவர்களுக்கும் பாலையாவுக்கும் உள்ள பிணக்காகவும் இருக்கலாம் .எமக்கு இது பற்றி எதுவும் தெரியாது .எனவே எமது கணக்கறிக்கையில் தவறுகள் உண்டானால் தெரியப் படுத்தினால் திருத்த முடியும் .எனவே இங்கு எமது பெயருக்கு களங்கம் ஏற்பட எதுவித வாய்ப்புமில்லை .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்