உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்uk1-600x450வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலேக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலே, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்த நிலையிலே இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளார்.

இன மோதல்களின் போது இடம்பெறும் கொடூரங்களில் ஒன்றான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியாகவும் கடமையாற்றும் பரோனஸ் அனிலே, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில், வட மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன், வட மாகாண அமைச்சர்களான கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொண்ணுத்துறை ஐங்கரநேசன், மீனபிடித்துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதன்போது போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் தற்போதைய நிலமைகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலமைகள் மற்றும் மனித உரிமை நிலமைகள் தொடர்பிலும் முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அமைச்சர்களிடம் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பணிகள் மற்றும் ஜெனீவாத் தீர்மானத்தை அமுல்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர், முதலமைச்சரிடம் வினவியுள்ளார்.

இதன்போது வடக்கில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள அதிகரித்த இராணுவ பிரசன்னம் அதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள், மீள்குடியேற்றம், காணிகள் கையகப்படுத்தல் போன்ற விடையங்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அது மாத்திரமன்றி புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பதை பிரித்தானியா உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் தாம் பூர்வீகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அவர்களின் தன்னாட்சி அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டு, சமஸ்டி அடிப்படையில் அதிகாரம் பரலாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த முதலமைச்சர், இதனை உறுதிப்படுத்திக் கொடுப்பது பிரித்தானியாவின் தார்மீகக் கடமை என்றும் பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனேலியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வட மாகாண ஆளுரை் ரெஜினோல்ட் குரேயையும் சந்திக்கும் பிரித்தானிய அமைச்சர், கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்