Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



unavngivetகிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று 07-11-2016 சுமாா் 112 கிலோ வரையான கேரள கஞ்சா தர்மபுரம் காவல்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று அதிகாலை ஆறு மணியளவில்  சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா  கொண்டுவரப்படுவதாக தா்மபுரம்  காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு  பிராந்திய பிரதி காவல்துறை அதிபா் மகேஸ் வெலிகண்ணவின்  வழிகாட்டலில் தர்மபுரம்  காவல்  நிலைய பொறுப்பதிகாரி டிஎம் சத்துருங்க தலைமையிலான விசேட காவல்துறைக் குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு   மேற்படி கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனா்.

இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு  காவல்துறை குழுவினரை  அவதானித்த கடத்தல்காரர்கள் படகில் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதேவேளை இரண்டு நபா்கள் உந்துருளியில் சுமாா்  நாற்பது  கிலோ வரையான கஞ்சா பொதியை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்ட போது கடற்படையினா் சுற்றி வளைத்த நிலையில் அவா்களும் கஞ்சா பொதியை  எறிந்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

 

இதன் போது மீட்கப்பட்ட   40  கிலோ  வரையான கஞ்சாவும், கடற்படையினரால்  விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது  இதேவேளை  காவல்துறையினரினால் மீட்கப்பட்ட 72  கிலோ கஞ்சாவுமாக சுமாா் 112 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தா்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனா். விரைவில் சந்தேகநபா்களும் கைது செய்யப்படுவா் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்