Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில், சினிமாப் பாணியில் வாகனத்தில் வந்தவர்களால் 20 வயதுடைய இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.தந்தையுடன் தனியே வீட்டிலிருந்தபோது கயஸ் வாகனத்தில் வந்த ஐந்துபேர் குறித்த பெண்ணின் தந்தையை மிரட்டி, பெண்ணைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். இதுபற்றி குறித்த பெண்ணின் குடும்பத்தினர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு வார காலத்திற்கு முன்னர் குறித்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு கடத்திச் சென்ற இளைஞர் நேரடியாக வீட்டிற்கு வந்து கேட்டதாகவும், எனினும் தாங்கள் மறுத்துவிட்ட நிலையிலேயே குறித்த இளைஞன் நான்குபேரை அழைத்துவந்து பெண்ணைக் கடத்திச் சென்றதாக பெண்ணின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் கடத்திச்செல்லப்பட்ட இளம் பெண் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்