உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்canadaஇலங்கைக்கான கனேடியத் தூதுவர் செல்லி வைட்டிங் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது.கனேடியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

இந்தப் பேச்சின்போது இலங்கை அரசு தயாரித்துவரும் புதிய அரசமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சம்பந்தனிடம் கனேடியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் கேட்டறிந்துகொண்டனர்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்