உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்stock-crash1-720x480பழைய 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் செலுப்படியற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மும்பை தேசிய பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 698.86 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 26 ஆயிரத்து 818 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 229.45 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 8 ஆயிரத்து 296 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. அத்தோடு, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 54 சதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

500, 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த நவம்பர் 8ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அதேபோல், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராத விதமாக ஹிலரி கிளிண்டனை தோற்கடித்து டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

இந்த இரண்டு முக்கிய சம்பவம் இந்திய, ஆசிய மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்