உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நியுசிலாந்தின் பிரதான தீவுப்பகுதியான தெற்கு தீவிலுள்ள கிரிஸ்ட் சர்ச் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நியூஸ்லாந்து உள்ளுர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிரிஸ்ட் சர்ச் பகுதியிலிருந்து 95 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் மற்றும் பொருட்சேதம் குறித்தஎந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தெற்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் அங்கு பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்ற போதிலும் கடலில் அலைகளின் எழுச்சி உயர்வாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் கடுமையாக குலுங்கியதனால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகிறார்கள்.

இதேவேளை குறித்த பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் 6 தசம் 2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

பசுபிக் நிலநடுக்க வலையத்தில் அமைந்துள்ள நியுசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றமை வழமை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தினால் 185 பேர் உயிரிழந்திருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்