உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பண் கலை பண்பாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் முன்னேற்ற கரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆயினும் நடப்பு நிலையில் நமது மக்களின் கல்விநிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதே எம்முன உள்ள உடன‍டிப்பணியாக இருக்கின்றது. இது பற்றி நான் கிராம உத்தியோகத்தர் அவர்களுடனும் கதைத்துள்ளேன். அப்போது அவர் எனக்கு சுட்டி காட்டிய சில விடயங்கள். பண்ணாகம் வடக்கு(காலையடி) அ மி த க பாடசாலையில் மட்டும் மெல்லக்கற்கும் மாணவர்களாக 45 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு வைத்து எழுத பழக்கவேண்டியிருக்கின்றது. இதனை மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்த ஒழுங்கு செய்யலாமே என கிராம உத்தியோகத்தர் அவர்கள் எனககு குறிப்பிட்டுள்ளார். நானும் அதற்கு சம்மதித்துள்ளேன்.அவர் என்னிடம் இன்னும் ஒரு கேள்வியை கேட்டார். ஏன் அம்மாள் முன் பள்ளியும் சிறிமுருகன் முன்பள்ளியும் இன்னும் ஒன்று இணைக்கப்படவில்லை எனக்கேட்டார்.

……………………………………
நான் கூறினேன், நானும் இதைத்தான் நீண்டகாலமாக கேட்டுவருகின்றேன். அதற்கு அவர்கள் பிள்ளைகள் மன்றத்திற்கு நடந்து வர நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கின்றது எனக்கூறுகின்றார்கள் என்று.கிராம உத்தியோகத்தர் என்னிடம் கேட்டார் எவ்வளவோ தூரத்துக்கு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போகின்றார்கள் இதுவா பெருந்தூரம் என்று. இது நல்ல ஒரு கேள்வி. சங்கானையில் மட்டும் எமது ஊர் பிள்ளைகள் 4 பேர் முன்பள்ளியில் கற்கிறார்கள். தூரம் என்பது பிரச்சனையில்லை. வளங்களையும் வசதிகளையும் ஒருங்கிணைக்கும் போதுதான் நாம் தலைநிமிரமுடியும்.

இரு முன்பள்ளிகளையும் ஒன்றுணைப்பதென இறுதியானதும் உறுதியானதுமான தீர்மானத்தை நான் எடுத்துவிட்டேன். எனது இந்த முயற்சிகளுக்கு யாரும் குந்தகம் விளைவிப்பார்களாக இருந்தால் நான் மிகவும் கடுமையான தீர்மானங்கள் எடுக்கவேண்டிவரும் என எச்சரிக்கவேண்டிய தருணத்தில் தான் இப்போது இருக்கின்றேன். உத்தேசமாக அமைக்க இருக்கும் முன்பள்ளி வடமாகாண கல்வித்திணைக்கள விதிமுறைகளுக்கு அமைவாகவே அமைக்கப்படவேண்டும். மலசல கூட வசதிகள் காற்றோட்டவசதிகள் விளையாட்டுத்திடல் பூங்கா என்பன அமைக்கப்படவேண்டும்.

மன்றத்தில் அமைக்கப்பட இருக்கும் முன்பள்ளிக்கு பதிவுக்காக மயில் வண்ணத்துபூச்சி சிட்டுக்குருவி… . குழந்தைகளினை தூண்டும் வகையி்ல் அல்லது உங்கள் விருப்பத்தின் பெயரிலும்  பெயரிடலாம் எனது இந்த முயற்சிக்கு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் ஆ.நற்குணேஸ்வரன்(மணி) வட்டு சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் திருகேஸ்வரன் வட்டு கார்த்திகேசு வித்தியாலய அதிபர் சிவசுப்பிரமணியம் ஆறுமுகவித்தியாலய ஆசிரியை இந்துமதி யாதவன் ஆகியோர் எனக்கு முழுமையான ஆலோசனை வழங்குவார்கள்

நான் எதிர்பார்ப்பது இதற்காக உடனடியாகவும் அவசரமாகவும் கனடா பண் கலை பண்பாட்டுக்கழகத்தினது நிதி அனுசரணையைதான். உத்தேச எனது இத்திட்டத்திற்கு கட்டிடம் சிறு அறை உட்பட மலசலகூடம் சிறுவர் பூங்கா அமைக்கப்படவேண்டும். இச்சூழலில் பல்நோக்கு உள்ளக அரங்கும் சர்வதேச தரத்துக்கு அமைவாக விளையாட்டு திடலும் அமைய இருப்பதால் இந்த சூழல் பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சிக்கு பொருத்தமானது. தயவு செய்து நான் பிராக்கில்லாமல் எழுதுகின்றேன் என கருதாமல் (உண்மையில் நான் எனது வங்கி வேலை ஒன்றை ஒத்திவைத்துவிட்டே எழுதுகின்றேன்) ஆக்கபூர்வமான முடிவை( முதலில் அம்பாள் சனசமூக நிலையம் பிறகு தான் மற்றது என அடம் பிடித்து எமது ஊர் முன்னேற்றத்தை சிதைக்காமல்) 19.02.2011 இல் கூட்டத்தில் ஒரு இருபது இலட்சம் சேர்த்து மறுமலர்ச்சி மன்ற கணக்குக்கு அனுப்பி உதவுவீர்களாக இருந்தால் ஒருகால் இன்று மன்ற பழைய படங்களை தூசு தட்டிப்பார்த்து புளகாங்கிதமடைவது போல உங்கள் பிள்ளைகள் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையர் நாடு எனவந்து மகிழ்ந்து குலாவலாம்.அழ.பகீரதன் தலைவர் மறுமலர்ச்சி மன்றம்.

19 Responses to “எமது ஊரின் கட்டாய உடனடித் தேவை…!”

 • Chandrahasan:

  முரண்பாடான கருத்துக்கள் முட்டி மோதுவது ஆரோக்கியமானதே. இந்தச் சிந்தனை மோதல்கள் எமது கிராமங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான தூர நோக்குடைய அபிவிருத்தித் திட்டத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. தனிமனிதர்களின் செல்வாக்கில் முடிவெடுப்பதை தவிர்த்துக் கொள்ளுவதற்கு வேறு மார்க்கம் இல்லை. அதே வேளையில் அப்படிப்பட்ட திட்டம் உருவாக்கும்வரை எதுவும் செய்யாது இப்படியே இருக்க முடியாது. அதுவரை உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் இடைக்கால திட்டங்கள் நிறைவேற்றப்படுவது அவசியம்.

  அம்பாள் சனசமூக நிலையத்தின் புனரமைப்பை ஒரு இடைக்கால திட்டமாகவே என்னால் பார்க்க முடிகிறது. இக்கட்டடத்தின் பயன்பாடு நீண்ட கால திட்டத்திற்கமைய மாற்றமடையலாம். பாரம்பரிய பெறுமானமுடைய இக் கட்டடம் பேணப்பட வேண்டியது அவசியம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அவசரத்திற்கு பூசி மெழுகாமல் உரிய முறையில் கட்டடம் மெருகூட்டப்பட வேண்டும்.
  நீண்டகால திட்டமிடலில் இச்சூழல் முன்பள்ளிக்குப் பொருத்தமானதல்ல என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளுவர். முன் பள்ளி ஒரு பிள்ளையினுடைய சமூகத்துனான இயற்கையுடனான புரிதலை உருவாக்கும் இடம். அது அமையும் சூழல் மிக அவதானமாகத் திட்டமிடப்பட வேண்டும். சிட்னியில் சில முன்பள்ளிகளை திட்டமிட்டவன் என்ற வகையிலும் தற்போது ஒரு முன்பள்ளியை திட்டமிட்டுக்கொண்டிருக்கின்ற அனுபவத்திலும் இதை சொல்லமுடிகிறது. ஒரு முறையான முன்பள்ளியை மன்றத்திலோ அல்லது வேறு சரியான சூழலிலோ அமைத்துக் கொள்ளலாம். இது அவசரத் தேவையாயின் மன்ற அபிவிருத்தித் திட்டத்தின் முதல் நடவடிக்கையாக இது அமையலாம். மன்றத்தில் கட்டும்வரை தற்காலிகமாக அன்னதான மடத்தில் முன்பள்ளி இயங்கலாம். அரைகுறையாக அம்பது பள்ளிகள் இருப்பதை முறையாக ஒன்று இருப்பதே மேல். அதனை வளர்சியடைந்த நாடுகளின் தரத்திற்கு வடிவமைத்து தரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
  மேலும் முன்பள்ளியையும் அம்பாள் சனசமூக நிலையத்தின் புனரமைப்பையும் வெவ்வேறாகப் பார்க்க வேண்டுமென்பதும் ஒன்றாக்கி குழப்பமடைய் தேவைஇல்லை என்பதும் எனது தாழ்மையான கருத்து.

 • அழ பகீரதன்:

  திரு பாலகுமார் அவர்களுக்கு, நான் வாசிகசாலை திருத்துவதற்கு எதிரானவன் இல்லை. நான் வாசிகசாலை திருத்துவதற்கு நான் பார்வையிட்டபோது நான் வெறும் பார்வையாளனாக தான் கலந்துகொண்டேன். கோடிக்கணக்கில் எம்மிடம் பணம் இருந்தால் நாம் அம்பாள் சன சமூக நிலையம் 25 லட்சம் செலவளித்து செய்வதில் சங்கடம் எதுவும் இல்லை. முன்பள்ளியை அன்னதான மடத்தில் நடத்த சொல்லி அதன் ஆசிரியைக்கு முன்பே நான் சொல்லியிருக்கின்றேன். அவர் தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையே தவிர நான் அல்ல. முன்பள்ளி என்பது அதன் கட்டமைப்புக்குள் இருக்கும் போதே மாணவர் திறன்களை காட்சிப்படுத்த முடியும். மாணவர் திறன்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் என்பது கல்வி அமைப்பு விதிக்கும் விதிமுறை. அதற்கு முன்பள்ளி அன்னதான மடத்தில் விடமாட்டினம் என்பது முன்பள்ளி ஆசிரியையின் கருத்து. ஆரம்ப பருவ கல்வி ப்பணிப்பாளர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் முன்கல்வி பிரமாணங்கள் இடமளிக்கும் பட்சத்தில் முன்பள்ளியை மேல் மாடியில் நடத்துவதை இட்டு எனக்கு ஆட்சேபனை இல்லை. 6 இலட்சம் காணும் என்பது நான் எனது வீட்டில் சில விரிவாக்கல் வேலைகளை செய்தேன் இதற்கு நான் ஆறு லட்சத்துக்கும் குறைவான தொகையையே செலவளித்தேன். அதை வைத்துத்தான் சொன்னேன்.மேல் மாடியில் முன்பள்ளி நடாத்தலாமா இல்லையா என்பதை தயவு செய்து ஆராய்ந்து உறுதிப்படுத்தாமல் முடிவெடுக்க வேண்டாம். பெருந்தொகை பணத்தை செலவு செய்யவேண்டுமென்றால் ஆராய்ந்து செய்யுங்கள் எனத்தான் சொல்கின்றேன். ஊரில் பரந்த வெளியான நிலங்கள் உண்டு. அவற்றை எல்லாம் வேண்ட தனிப்பட்ட நபர்கள் முன்வர மாட்டார்கள். அம்பாள் சனசமூக நிலையத்தில் படித்த முன்பள்ளியின் பழைய மாணவிகள் இருக்க கூடும் அவர்களின் பெயரில் தான் நிலங்கள் இருக்கும்.அவர்களுக்கு தான் பணிப்புலத்தில் நிலங்களை சீதனமாக வழங்குவார்கள் எனவே அவர்கள் நிலங்களை தானமாக வழங்கினால் அரச அரச சாராஅமைப்புகளூடாக கட்டிடம் அமைப்பதற்கு வாய்ப்பு உண்டு என தான் சொல்கின்றேன். யாரும் தராவிட்டால் நான் யாரையும் நோகமாட்டேன். புலம் பெயர்நாடுகளிலும் என்னைப்போல் தான் பலரும் கடன் சுமையுடன் வாழ்கின்றார்கள் என்ற யதார்த்தம் எனக்கு புரியும்.

 • T.BALAKUMAR P.S.S.NELAYAM:

  திரு அழ பகி அவர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் மக்கள் தேவை கருதியே. உங்கள் இந்த முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.எனது சில சந்தேகங்கள் அதற்க்கான பதிலையும் எதிர்பார்க்கின்றேன். 1. இணையம் ஆரம்பித்த நேரம் நான் வாசிகசாலை பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்கு திரு அழ.சந்திரகாசன் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்.அதாவது வாசிகசாலையின் உருவாக்கம் அதன் இடிபாட்டை கட்டவேண்டிய அவசியம் பற்றி இதற்க்கு உங்கள் பதில். 2. வாசிகசாலையை பார்வையிட நீங்கள்,தேவர் அண்ணர்,சபாநாயகம்அண்ணர்,யெயராசா,தலைவர் காந்தன் அதே நேரம் தொலைபேசி அழைப்பில் நானும் கலந்து கொண்டோம்.அந்த நேரம் ஏன் நீங்கள் அதற்க்கான செயற்த்திட்டம் பற்றிய வினாக்கள் வினாவப்படவில்லை. 3. திரு சி.சிவானந்தம் அவர்கள் முன் பள்ளி உருவாக்கம் பற்றியும் அதன் உருவாக்கத்துக்கு இலங்கை அரசாங்கம் செய்யும் உதவிகள் பற்றிய கவனம் ஏன் எடுக்கவில்லை எடுத்திருந்தால் அதன் விளக்கம் தரலாம்.அரசாங்க உதவி எந்தளவு கிடைக்கும் கிடைக்கும் என்றால் எப்படி? 4. அன்னதான மடத்தில் பாடசாலை நடாத்தக்கூடிய சகல வசதிகளும் உண்டு.அதாவது கட்டிட அளவில்,மலசலகூடம்,காற்றோட்டம்,விளையாட நல்ல இடம்,நிழல் தர அரசமரம்,வேப்பமரம்,நிறையபிள்ளைகள் படிக்க இடவசதி, அங்கு தேவைகள் புத்தகங்கள்,தளபாடங்கள்.ஆகவே ஏன் ஊரில் இருக்கும் உங்களைப்போல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆலயத்தினருடன் கேட்க்காமல் மக்கள் விரும்பவில்லை என தட்டிகளிக்கவேண்டிய அவசியம் ஏன்? 5.மன்றத்தின் புதிய திட்டத்துள் வரும் முன் பள்ளி உருவாக்கம் இருக்கும்போது.ஏன் இந்த அவசரம் இப்போ? 6. வாசிகசாலை கட்டிடம் கட்ட கிட்டத்தட்ட எவ்வளவு தேவை என நான் கட்டிடக்கலை நிபுணர் அழ.சந்திரகாசன் அண்ணனுருடன் ஆலோசனை பெற்று 20,25 லட்ச்சம் அளவு தேவைப்படும் என கூறினார் அந்த தொகைபற்றி நான் எழுதியபோது ஏன் நீங்கள் ஒரு முறைதனும் 6 லட்சம்போதும் என்று மறுக்கவில்லையே.இது பற்றி திடீர் அக்கறைக்கான காரணம். 7.வாசிகசாலைக்கான புனர் நிர்மான வேலைக்காக சரீர உதவிகள்.ஆலோசனைகள் பல அறிவாளிகள் பட்டதாரிகள் சமூகசிந்தனையாளர்கள் ஏன் முன் வர மறுத்தார்கள் யாருக்கு பயப்பிடுகிறார்கள்? 8. கோபுரம் கட்ட பணம் கொடுத்தார்கள் என உங்கள் குற்றம் என்றால் அது உங்கள் பக்க கருத்து. அதற்க்கு பணம் சேர்த்தகாலங்களில் மறுப்பு தெரிவித்து வாதாடியவனில் நானும் ஒருவன்.நான் என்றும் அம்மன்கோயிலுக்கு நிதி வளங்கியதில்லை.கொடுப்பவன்அவனது தனிவிருப்பமே இதற்க்காகவே முன் பள்ளிக்கு பணம்கேட்பதா? 9.பணிப்புலம் வாழ் மக்கள் எவ்வளவு தூரம் உங்கள் திட்டங்களை அனைத்து மக்களை உள் வாங்குகிறீர்கள்.ஒரு விழா நடாத்தும்போது யாரை உள்வாங்கப்படுகிறது.என்றாவதுசாந்தை.பணிப்புலம்,மன்றம் வாசிகசாலைகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடும் பளக்கம் உண்டா? !10.இடப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவுபெறும் போது உங்கள் திட்டங்களை உள்வாங்கப்படும்.புலம் பெயர் மக்கள் வருமானம் பற்றியும் அதேவேளை ஊரவர் வருமானம் அதன் பணவீக்கம் பற்றிய விளக்கம் எழுதிய நீங்கள் எப்படி 6 லட்சத்தில் வாசிகசாலை திருத்தமுடியும்.அன்று ஒரு 2 வண்டில் மணல்,5 பை சீமந்து, ஒரு மேசன், ஒரு கூலி இவர்களை வைத்து செய்தோம்.மேசன் உடைஞ்ச இடிஞ்ச இடத்தை தட்டேப்பையாலை ஒரு தட்டிப்போட்டு சீமந்தைகுளைத்து பூசி மெழுகி திருத்தி பூச்சும்பூசி வண்ணம் பூசினோம்.அதனால் தான் இந்த பெரியளவில் சேதங்கள் இன்று.ஆகவே தான் இதன் திருத்தவேலகள் ஒரு உத்தியோகபூர்வமாகவும்,தற்ப்போதைய கணனியுகத்திற்க்கும்,முதியவர் இளையோர் வசதிகள் கருத்தில் கொண்ட திருத்தவே 20,25 லடச்சம் தேவை.நாம் பணசேகரிப்பில் ஈடுபட்டுள்ளபோது நீங்கள் இப்போ 6 லட்ச்சம் போதும் என்றால் இந்த செயல் என்னையும் வாசிகசாலை பற்றிய அக்கறைகொண்டவர்கள் கேள்விகள் இதை திருத்துவதை விருப்பம் இல்லாமல் குளப்புவது ஏன்? பணிப்புலம் ச.ச.நிலையம் வெளிநாட்டு தொடர்பாளர் த.பாலகுமார்

 • manithan:

  பகி அவர்கள் ஒன்றை புரியமறுக்கிறீர்கள்.முன் பள்ளி என்றால் என்ன என புரியாமல் நாம் கல்வி அறிவற்றவராக இருக்கலாம்.ஆனால் பகுத்தறிவும்,பொதுஅறிவும்.சமூக அனுபவமும் நிறையவே இருக்கிறது. ஆறு லட்ச்சம் நான் உங்களிடம் அனுப்புகின்றேன் அந்ந நிதியுடன் நீங்கள் முன்னின்று வாசிகசாலை புனர் நிர்மான வேலையை ஆரம்பியுங்கள்.இது பற்றி பாலகுமார் அண்ணரின் தலையீடு இல்லாமல் நான் அவருடன் கதைக்கிறேன்.ஆனால் திருத்தவேலை நமது திட்டமிடல் படி செய்யவேண்டும். கோபுரம் என்னும் ஒரு புளியம்கொம்பை பிடியாமல் எனி எப்படி செல்லமுடியும் என கவனம் எடுக்கலாமே.மன்றத்தில் கட்ட இருக்கும் முன் பள்ளியை கொஞ்சம் பெரிதாகவும் சட்டதிட்டங்களுக்கு ஏற்புடையதாய் அமைக்கலாமே? புலம் பெயர் மக்களை மிரட்டுவது போல் உங்கள் கருத்து அமைகிறது.தற்ப்போது என் சொந்த கருத்து மன்றத்தின் கட்டமைப்பை நிறுத்தப்பட்டுவிட்டதா இல்லை தள்ளிபோடப்பட்டதா. வாசிகசாலை திருத்த சம்மதம் என்றால் உங்கள் கணக்குஇலக்கத்தை அறிவிக்கும் பட்ச்சத்தில் பணம் சில நாட்க்களுக்குள் அனுப்பலாம்.நம் அறிவு கொஞ்சம் மந்தநிலையே அறிவுசார் சமூகங்கள் ஏன் சாதாரண 4 ம் வகுப்பே படியாத ஆலயத்தினர் அராஐகங்களுக்கு அடங்கி போகிறீர்கள்.அன்னதானமடத்தில் முன்பள்ளி நடத்த பல பணிப்புலம் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளார்களே. இருக்கிறதை விட்டு ஏன் ஆலாய் பறக்கவேண்டும். புலம்பெயர் முட்டாள் மனிதன்

 • அழ பகீரதன்:

  முன்பள்ளிக்கான பிரமாணங்கள்
  முன்பள்ளிகள் பின்வரும் அடிப்படைப் பிரமாணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்
  முன்பள்ளிக்கான கட்டிடம் குறைந்தது ஒரு பிள்ளைக்கு 10 சதுர அடியினைக் கொண்டிருத்தல் வேண்டும்
  25 பிள்ளைகளுக்கு ஒரு மலசல கூட வசதி என்ற அடிப்படையில் போதுமான அளவு வசதி இருத்தல் வேண்டும்
  போதியளவு காற்றோட்டம் வரக்கூடிய வகையில் 1:7 கியூபிக் என்ற அளவில் ஜன்னல்கள் அமைக்கப்பட வேண்டும்.
  முன்பள்ளியை சுற்றி பாதுகாப்பான வேலிகள் அமைக்கப்படல் வேண்டும்.
  முன்பள்ளியில் பொருத்தமான முதலுதவிப் பெட்டிகள் இருத்தல் வேண்டும்.
  முன்பள்ளிகளின் அமைவிடம், கவர்ச்சியான சூழல், ஏற்ற பூங்கா, விளையாட்டு முற்றம் என்பவற்றை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  20 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையிலும் விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்கு 5 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  பிள்ளைகளுடைய உளத்திருப்திக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான தளபாடங்களும் உபகரணங்களும் மெருகூட்டப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
  சமய அனுட்டானங்களை மேற்கொள்வதற்கான இட ஒதுக்கீடுகள் அமைந்திருத்தல் வேண்டும்.
  எந்த ஒரு முன்பள்ளியும் இயற்கை அனர்த்தம் ஏற்படக்கூடிய சூழலில் அமைத்தல் கூடாது. அத்தகைய இடத்தில் இருந்து குறைந்தது ஆயிரம் மீற்றருக்கு அப்பால் இருத்தல் வேண்டும்
  மேற் குறித்த விடயம் வலம்புரி பத்திரிகை 04.02.2011 இன் பத்தாம் பக்கத்தில் வடமாகாண முன்பள்ளிகள் இவ்வாண்டு முதல் வடமாகாண கல்வியமைச்சுடன் இணைப்பு என்ற செய்தி தலைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

 • அழ பகீரதன்:

  வாசிகசாலை வேறு முன்பள்ளி வேறு என்ற யதார்த்தம் புரியாவிட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது. வாசிகசாலை திருத்துவதற்கு வெறும் 6 லட்சம் போதுமானது. பெ்ரும்பணம் தேவையில்லை. மேல் மாடியிலோ கீள் தளத்திலோ முன்பள்ளி நடத்த இங்குள்ளவர்கள் விரும்புவதாக இல்லை. அம்மன் வீதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டி(கிறீஸ்தவர்கள்) பாலர் பாடசாலை நடாத்துகின்றார்கள்.நீங்கள் வானுயர கோபுரம் கட்டிக்காட்டியிருக்காவிட்டால் நான் இப்படி உங்களிடம் இறைஞ்ச மாட்டேன்.உங்களிடம் அப்போது பெருந்தொகை பணம் இருந்ததால் தான் அவ்வாறு செய்தீர்கள். அன்னதான மடத்தில் படிப்பிப்பதற்கு ஆசிரியையும் மாணவர்களின் பெற்றோரும் விரும்பினால் அது எனக்கும் விருப்பம் தான். ஆனால் இவர்கள் விரும்புகின்றார்கள் இல்லை. நீங்கள் நேற்றோ அல்லது இன்றோ தான் சனசமூக நிலையம் திருத்தவென்று புறப்பட்டவர்கள். நான் அவ்வாறல்ல. இந்த விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன். சனசமூக நிலையத்தில் தான் முன்பளளி இருக்க வேண்டும் என்பது இல்லை. இப்போது முன்பள்ளி நடக்கும் நிலத்தை இனாமாக வழங்கினாலே அந்த நிலத்தில் பிரதேச ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அரச அரச சாரா நிதி உதவிமூலம் கட்டிடம் அமைப்பதற்கு முயற்சிக்க முடியும். நான் யதார்த்தமாகத் தான் பேசுவேன். அதீத கற்பனாவாத நிலையிலிருந்து பேசவில்லை.

 • sivasakthebandian:

  பகி அவர்கள் எதை விரும்புகிறார் வாசிகசாலை இடியட்டும் எனவா அல்லது கனடாவில் வாசிகசாலைக்கு பணம் சேகரிப்பை தடுக்கமுனைபவர்களுடன் கை கோர்த்துள்ளாரா. சிவசக்திபாண்டியன்

 • nisanthan:

  பகி அவர்கள் சற்று யதார்த்தங்களை உணர மறுக்கும் போது எதை எவர் சொல்லமுடியமா. நிஷந்தன்

 • manithan:

  பணிப்புலம் வாழ் மக்களிடம் இனம் காணப்பட்டதாய் சில அறிவுசார் சிலரை பகி அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அதே வேளை பாலர் பாடசாலைக்கான சில திட்டத்தையும் அதற்க்கான தேவைகளையும் குறிப்பிட்டு அதற்க்கான அறைகூவலும் கட்டாயப்படுத்தினார்.எனி எனது கருத்து பணிப்புலம் ஆலயத்திற்க்கு பொதுமக்கள் பணத்தில் கட்டப்பட்ட அன்னதானமடம் 15 நாட்க்கள் மட்டுமே பயன்படுத்திவிட்டு 350 நாட்க்கள் கூரை தரையுடனும் தரை கூரையையும் பார்த்து கேட்க்குதாம் உந்த ஊரிலை இருப்பவங்கள் எல்லாரும் முட்டாளோ என கேட்க்குதாம்.அதாவது நீங்கள் தானமாக நிலம் வாங்கி புலம் பெயர்மக்களிடம் பணம் சேர்த்து ஓரு பாலர் பாடசாலையை ஏன் கட்ட திட்டமிடவேண்டும்.மக்கள் அனைவரையும் ஒன்று இணைந்து சும்மா கிடக்கும் அன்னதானமத்தை ஒரு பாலர்பாடசாலை ஆக்கமுடியாது.200 நாட்க்கள் மட்டுமே பாலர்பாடசாலை நடத்தும் நாட்க்கள்ஆகும்.புலம் பெயர் வாழ் மக்கள் உழைத்து வீட்டுவாடகை,தண்ணீர்,கீற்றர்,காப்புறுதி,வரி,கார்,படிப்பு, உணவு, உடை, பெற்றோர் உறவுகள் என உதவிகள் செய்தும் இதர செலவுகள் ஊர்நோக்கியதிட்டங்கள். நாமும் இருக்கும் இடத்தை பாலர்பாடசாலை நடாத்த என்ன வழிகள் உண்டு என ஆராயவேண்டும்.இன்னும் ஒரு சந்தேகம் மன்றத்தில் உருவாக இருக்கும் கட்டுமானத்திட்டத்துக்குள் ஒரு பாலர் பாடசாலை வருகிறதே பின்பு ஏன் ஒரு புது நிலம் புது திட்டம்.இருப்பதை விட்டு ஏன் இன்னும் ஒரு திட்டம்.தற்ப்போது புலம்பெயர் மக்கள் சில திட்டங்களை தலைமேல் சுமந்துள்ளோம்.பணிப்புலம் வாசிகசாலை 25 லட்சம்,மன்றம் 3 மில்லியன்,சாந்தைபிள்ளையார் 3 மில்லியன்,தற்ப்போது கையை மிஞ்சிய திட்டங்கள் ஆனாலும் இவை நிறைவுகள் காணும்போது மற்றத்திட்டங்களை நோக்கிச்செல்லமுடியும்.எல்லாவற்றையும் புலம் பெயர் கரங்கள் உதவமுடியும் என்றால் தப்பானகணக்கு.ஊரில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சமுதாயத்துக்காக ஒன்று சேர்ந்து நடக்கிறீர்களா இல்லையே அவைகள் சீர் செய்யவேண்டிய முதல் வேலைத்திட்டம்.ஆகவே மக்கள் நாம் ஒன்று சேர்ந்து எங்களால் உருவாக்கிய அன்னதான மடம் பாலர்பாடசாலை நடாத்த கிளந்து எழுவோம். மனிதன்

 • நலன் விரும்பி:

  பண்கலை பண்பாட்டுக்கழக தலைவரின் இந்த அறிவிப்பின் மூலம் மறுமலர்ச்சி மன்றத்தலைவர் திரு பகிதரனின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா…

 • எதிர் வரும் மாசிமாதம் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்ரரில் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய புணர்நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தின் நிகழ்வுகளில் எது வித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகன்றோம்.நன்றிகள்.
  தலைவர்-பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா.

 • அழ பகீரதன்:

  வடமாகாண கல்வித்திணைக்களத்தின் பத்திரிகை செய்தியின் படி ஒரு பிள்ளைக்கு பத்து சதுர அடி என்ற கணக்குப்படியே கட்டிடம் அமைந்திருக்கவேண்டும். பத்திரிகை செய்தியை நான் பின்னர் தருகின்றேன்.எங்களுக்கு கலட்டி மண்ணில் பரந்த நிலப்பரப்பு இருந்தால் இன்னும் விரிவாக சிந்திக்கலாம் ஆனால் இல்லை என்பதே எனது பிரச்சனை

 • அழ பகீரதன்:

  நண்பன் ராசன் அவர்களுக்கு நாம் வசதி வாய்ப்பில்லாத காலத்தில் வாசிக சாலை மேல்மாடியில் முன்பள்ளி நடாத்தியது எங்களது இயலாமையின் வெளிப்பாடு. இன்றும் அதே இயலாமையின் வெளிப்பாட்டிலிருந்து பேசுவது எங்களை நாங்களே ஏழனப்படுத்துவது. எனது ஊரில் மதகுருக்கள் ஒருவரின் பிள்ளை கூட அயல்கிராமத்தில் உள்ள கிறீஸ்தவ முன்பள்ளியில் தான் கற்க்கின்றார். அதற்கு அடிப்படைக்காரணமுண்டு. தங்களது பிள்ளையும் கடவுளின் பெயரைச்சொல்லி பிளைப்பு நடத்தக்கூடாது என்பதால்தான். இதை ஒருவகையில் வரவேற்கலாம். ஆனால் வெளிநாட்டிலிருந்துகொண்டு எங்கட பிள்ளைகள் ஓடை போல் அமைந்த ஒரு சிறு கட்டிடத்தில் மேல் மாடியில் படிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. சுழிபுரம் கிழக்கு வீரபத்திர‍ர் சனசமூக நிலையத்துடன் இணைந்ததாக உள்ள முன்பள்ளி சனசமூக நிலைய கட்டிடத்தில் இயங்கவில்லை. அதற்கு வேறு ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டி நடாத்துகின்றார்கள் என்றால் அங்கு காணிகளை வழங்ககூடிய நல்ல மனம் படைத்தவர்கள் இருப்பதால் தான். எனது துரதிஸ்டம் என்னவென்றால் எனது பேரனார் நிலங்களை விற்காமல் வைத்திருக்கவில்லை. அப்போது அவர்களுக்கு வறுமை இருந்த‍தால் எங்கள் அப்பாச்சி இருந்த வழவை சுழிபுரம் வடக்கு (காடேறிவளவுக்கு கிட்ட விற்றுவிட்டார்கள். இருந்தால் நாம் அந்த நிலத்தில் முன்பள்ளி அமைத்திருக்கலாம். எனது கனவுப்பிரதேசம் அது

 • Selvarajah K.:

  அம்பாள் துணை,
  அனைவருக்கும் முதற்கண் வணக்கங்கள் உரித்தாகட்டும்.
  எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு மதசார்பற்ற முன்பள்ளி ஒன்று உண்டு. அதில்த்தான் நான் எனது பிள்ளைகளைப் பதிவு செய்தேன். அங்கு எனக்கு இடங்கிடைக்காமல் மதம் சார்ந்த முன்பள்ளியில் அரைக் கி.மீ தொலைவில் எங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைத்த்து. ஒவ்வொருநாளும் அரைக் கி.மீ போகும்போதும் வரும்போதும் எங்கள் மனம் பட்டவேதனை பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்தக் காஸ்ரம்.
  முன்பள்ளிகள் குழந்தைகளின் வசதிவாய்பு பெற்றோர்களின் நேரம்,போக்குவரத்து வசதிகள் போன்றனவையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
  28 வரடங்களாக இயங்குகின்ற முனபள்ளியை இல்லாதொளிப்பதை விட தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து தொடர வைக்கவேண்டும் என்பதே எனது அவா;
  நண்பன் பகிக்கு; காணிபூமி யாரும் கொடுக்க வேண்டியதில்லை. வாசிகசாலை மேல் மாடியில் 25 இலிருந்து30 பிள்ளைகள் இருந்து கல்வி கற்க்கும் அளவு இடமுண்டு. வாசிகசாலைக்கு முன்பு உள்ள இடத்தில் 500 பேர்வரை விளையாட இடமுண்டு. புத்த்ஜீவிகள் தேவையான வசதிகளை ஏற்ப்டுத்தவேண்டுமே தவிர பள்ளியை இல்லாதொழிக்க முயற்சிக்க்க் கூடாது. நல்ல பளக்கவளக்கங்களை ஆசிரியரும் பெற்றோருமே கற்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் தவறிளைத்தால் அவரைத் திருத்தவோ மாற்றவோ வேண்டுமே ஒளிய பிள்ளைகளை வேறிடத்துக்கு மாற்றுவத தீர்வாகாது. தவறுகள் எல்லா இடத்திலும் உண்டு. சீர்செய்யப்படவேண்டுமே தவிர இல்லாதொழிக்கமுயலக்கூடாது என்பதுஎனது தாழ்மையான கருத்தாகும்.
  அண்ணன் சிவனந்தனுக்கு;
  நண்பன் பகி க.ப.களகத்திடம் கேட்ட உதவிக்கு யாரும் கருத்துக் கூறவில்லை. எங்களால் தொடங்கப்பட்ட முன்பள்ளியை இல்லாதொளிக்கும் அவரது பகீரத்தனத்தக்கும் அவர் எழுதிய தவறான எழுத்துக்கும் யார்வேண்டுமானாலும் கருத்துக் கூறலாம். இது ஏன் உங்களுக்குப் புரியவில்லை.
  நன்றியுடன் இராசன்.

 • நலன் விரும்பி:

  திரு. சிவானந்தம் அவர்கள் இந்த இடத்திலாவது ஒரு தெளிவான கருத்தை தெரிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஏனேனில் பனிப்புலம் சனசமூக நிலைய வேலைத்திட்டமும் சரி மறுமலர்ச்சி மன்ற திட்டமும் சரி இறுதி கட்டத்தை தொட பல ஆண்டுகள் செல்லும் போல் உள்ளது. ஊரின் தேவையை கணிக்க கூடியவர்கள். எமது ஊரில் வாழும் கல்விமான்களே… அந்த வகையில் எமது ஊர் கிராம உத்தியோகத்தரை அனுகி உடனடித் தேவைகளை அறிந்து மற்றவர்கள் சண்டைக்கு வராத திட்டங்களை உடனடியாக தொடங்கினால் என்ன என்பதே எனது கருத்து. நாளைக்கு உதிக்க இருக்கும் சூரியனை விட இப்போது கையில் இருக்கும் மெழுகுவர்த்தியே மேல் என்பார்கள்… நாளை நாளை என்று கார்த்து இருந்து என்ன பயன்… இன்று ஊரில் வாழும் சிறுவர்கள் கல்வி சிறக்க உடனே செயலில் இறங்குவதே சாலச் சிறந்தது.

 • Sivanantham.S:

  பகீ அவர்கள் கனடா ப.க.க வினரிடமே இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். எனவே இதற்கான தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டியது க.ப.கழகத்தினரேயாகும்.அவர்கள் ஒரு நிர்வாகக் கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். எனவே இவ் விடயத்தில் தமது கருத்தினை வழங்குவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படலாம்.
  இக் கோரிக்கையானது இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட வேண்டியது. இயலாமையினால் கனடா மக்களிடம் விட்டு விட்டார். எனவே தனிப்பட்ட கருத்துக்களால்
  புலம் வாழ் மக்களின் புண்பட்ட நெஞ்சங்களை மேலும் புண்படுத்தாதீர்கள். அங்கு வாழும் புத்திஜீவிகளே எதிர்காலச் சந்ததியினரை வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர். எனது கருத்தில் தவறிருப்பின் மன்னித்துக்கொள்ளவும்.
  நன்றி!

 • அழ பகீரதன்:

  எங்கள் ஊர் எல்லைக்குள் உள்ள இரு முன்பள்ளிகள் பற்றியே நான் பேசுகின்றேன். ஆரையும் புண்படுத்துவதற்காக அல்ல. எங்கள் ஊரில் முன்பள்ளி அதற்குரிய கட்டிட வசதியுடன் இல்லை. எங்களூர் முன்பள்ளிகளில் படிப்பித்தால் நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாமல் போகும் என்பதால் அயல் ஊரிலுள்ள வசதியுள்ள முன்பள்ளிகளில் பிள்ளைகளை விட்டு கற்பிக்கின்றார்கள். அதனை நான் வரவேற்கின்றேன்.அதில் ஒரு தவறும் இல்லை. நான் கேட்பது இன்னமும் தங்களது பிள்ளைகளை பனிப்புலத்திலும் காலையடியிலும் விட்டு படிப்பித்துக்கொண்டிருக்கின்ற பெற்றோரிற்கு உதவும் வகையில் இரண்டு முன்பள்ளிகளையும் அதில் கற்பிக்கின்ற மூன்று ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து கற்பிப்பதற்கான ஒன்றுபட்ட அமைப்பைத்தான்.அது காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் அமைக்கச்சொல்லித்தான். இந்த இரண்டு பாடசாலைகளிலும் இணைந்து கற்பவர்களின் எண்ணிக்கை 35 பேருக்குள் தான் மிஞ்சி மிஞ்சி போனால் 40 பேரை இணைத்துக்கொள்ளலாம். பனிப்புலத்தில் அல்லது க.செல்வராசா அவர்கள் முயற்சி செய்து ஆரிடமாவது ஒரு இரண்டு பரப்பு நிலத்தை அன்பளிப்பு செய்வார்களாக இருந்தால் முன்பள்ளியை அமைக்கலாம்.இந்த முயற்சிகளுக்கு யாரும் முன்னின்று உதவமாட்டார்கள் என்பதாலேயே நான் அதனை மன்றத்தில் செய்யலாம் என சொல்லுகின்றேன். எனது பெயரில் மேற் குறித்த இடங்களில் காணி இல்லை என்பதால் நான் இதனை கூறுகின்றேன்.

 • egan:

  வணக்கம்
  பகீரதனின் ஆதங்கம் சரியானதாகப் படுகின்றது. பல முன்பள்ளிகள் ஊரில் இருப்பது நல்லது. ஆயினும் அதற்கான வசதிகள் சட்ட நியதிகள் சுகாதாரச் சூழல் என்பன சரியான முறையில் இல்லையாயின் ஒன்றிணைத்து நன்றாக நடத்தலாம். அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது கடினம்.
  எனவே சிந்தித்து செயல்படவேண்டும். பணகலை பண்பாட்டுக் கழகம் இந்த விடயம் தொடர்பாக சிந்திப்பது நல்லது. எமது ஊரின் வளர்ச்சிக்கு உதவவேண்டியது புலம் பெயர்ந்து வாழும் எங்கள் அனைவரதும் கடமை. அதை செயல்படுத்த ஒன்றிணைவோம். நன்றி-

 • Selvarajah K.:

  நண்பர் பகி அறிவது, நீர் இதில் எழுதியுள்ள எழுத்துக்கள் என்னைப்போன்றவர்களின் மனதைப் புண்படச்செய்துள்ளது.எதையும் எழுதும்போது யார் மனங்களும் புண்படாமலும் கோபத்தைத் தூண்டாமலும் எழுதுவது நன்று என நான்
  நினைக்கின்றேன்.
  நான் இருக்கும் நாட்டில் எங்கள் வீட்டைச் சுற்றி 1 கி.மீ தூரத்துக்குள் 5 சிறுவர்பாடசாலகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கிட்டத் தட்ட ஆரம்பநிலையில் 15 இல் இருந்து இருபது மாணவர்களும்,இரண்டாவது வருடம் 15 இல் இருந்து இருபது மாணவர்களும்,கல்வி கற்க்கின்றனர். மூன்று ஆசிரியர்கள் கறப்பிக்கின்றனர். இரண்டு பாடசாலைகளில் மட்டும் 60 பிள்ளைகள் பயிலுகின்றனர். இது அறிந்து கொள்வதற்கு மட்டும். நன்றியுடன் இராசன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்