Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் 162 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை பாராட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை வெள்ளிக்கிழமை இந்த நிதியை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது

இலங்கைக்கான மூன்றாண்டு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இத்தொகை வழங்கப்படுகிறது.

நிறைவேற்று சபையின் பதில் தலைவர் தாவோ செங்க் இது தொடர்பாக தெரிவிக்கையில் சவால்களுக்கு மத்தியில் இலங்கை அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி பாராட்டத்தக்கது. அனைத்து பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்களில் ஸ்திரத்தன்மை காணப்படுவதாகவும், பண வீக்கம் வீழ்ச்சியடையும் நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று வருட திட்டத்தின் கீழ் நாணய நிதியம் ஒன்று தசம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கடந்த ஜூன்மாதத்தில் தீர்மானித்திருந்தது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்