Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தனியார் பேருந்துச் சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் 12 அரச பேருந்துச் சேவைகள் மீது இன்று கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இன்னிலையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சேவைக்கு காவல்துறையினரது அல்லது இராணுவத்தினரது பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டின் அனைத்து இடங்களிலும் இலங்கை போக்குவரத்துச் சேவை மீது தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பேருந்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லையென அரச பேருந்துச் சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தனியார் பேருந்து ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கும் குறித்த தாக்குதல்களும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்