உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்japan-earthquake11பெரு மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையிலான டிட்டிக்காக்கா ஏரியின் ஓரத்தில் பெரு நாட்டின் வடமேற்கில் உள்ள ஆன்டெஸ் மாகாணத்தின் ஜுலியாக்கா நகரில் இருந்து சுமார் 77 கிலோமீட்டர் தூரத்தில்,பூமிக்கு அடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பெரு உள்ளிட்ட நாடுகள் அடிக்கடி நிலநடுக்கத்துக்கு இலக்காகி வரும் நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த ஜுலியாக்கா நகர மக்கள் தங்களது வீடுகளை விட்டு கூச்சலிட்டபடி ஓடிச்சென்று தெருக்களில் தஞ்சம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அருகாமையில் உள்ள லாம்பா மாகாணம் மற்றும் ஜுலியாக்கா நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்