உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledதடையை மீறிசெல்வோம் என ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7ம்திகதி நடைபெறும் கச்சத்தீவு ஆலய திறப்பு விழாவிற்கு தடையை மீறி செல்வோம் என ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் கச்சத்தீவு செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு எப்போதுமே உரிமை உண்டு. இந்த நிலையில் கடந்த 1983-ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுபோர் காரணமாக கச்சத்தீவு செல்வதில் தமிழக மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராமேசுவரம் துறைமுகத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தை அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மீண்டும் கச்சத்தீவுக்கு சென்று அந்தோணியார் ஆலய விழாக்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலய திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு கூறுவது வேடிக்கையாக இருக்கிறது எனவும் சிறுபான்மை சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் இந்த நடவடிக்கையை முறியடிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்