Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



mushroom-biriyani-11-jpg-845மஷ்ரூம் (களன் )பிரியாணி

தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – ஒரு கிலோ,
மஷ்ரூம்(களன் )  – 400 கிராம்,
வெங்காயம் – 250 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
புதினா – 50 கிராம்,
கொத்தமல்லித் தழை – 100 கிராம்,
மிளகாய்த்தூள் – 20 கிராம்,
எலுமிச்சைப் பழம் – ஒன்று,
பூண்டு – 100 கிராம்,
நெய் – 100 மில்லி,
எண்ணெய் – 100 மில்லி,
கராம்பு, பட்டை – தலா 10 கிராம்,
ஏலக்காய் – 5 கிராம்,
பிரியாணி இலை – 5 கிராம்,
தயிர் – 100 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,மீதியுள்ள பட்டை,ஏலக்காய்,பிரியாணி இலை மற்றும் கராம்பு சூடக்கி , நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக சூடக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.அனைத்தும் நன்றாக வதங்கி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் (களன் )சேர்த்துக் கிளறவும்.பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்).20 நிமிடம் கழித்து இறக்கும்போது,நெய் சேர்த்துக் கிளறி, சூப்பரான மஷ்ரூம் பிரியாணி ரெடி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்