Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சென்னை விமான நிலையத்தில் இருந்து துருக்கி நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.65 கோடி வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் விமான நிலைய தபால் நிலையம் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுப்பப்படும். அதுபோல் துருக்கி நாட்டில் உள்ள அங்காரா நகருக்கு அனுப்புவதற்காக ஒரு பார்சல் வந்தது. மூலிகை மருந்துகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் இருப்பதாக அந்த பார்சலில் எழுதப்பட்டு உள்ளது.

இந்த பார்சலில் சந்தேகம் கொண்ட தபால்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் மூலிகை மருந்துகளுக்கு பதிலாக கட்டுக்கட்டாக தாள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக துருக்கி நாட்டு லிரா பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் மொத்தம் 3 கோடியே 42 லட்சம் துருக்கி லிரா பணம் இருந்தது.

இதன் இந்திய மதிப்பு ரூ.65 கோடி. இதையடுத்து தபால் நிலைய அதிகாரிகள் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து கடத்தப்பட இருந்த துருக்கி லிராவை பறிமுதல் செய்தனர். அந்த பார்சல் சென்னை ஜார்ஜ்டவுன் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தது.

அதிகாரிகள் பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது போலி முகவரி என தெரியவந்தது. துருக்கி நாட்டுக்கு இவ்வளவு பணத்தை அனுப்ப முயன்றது யார்? அவர்களுக்கு இந்த பணம் எப்படி கிடைத்தது? துருக்கியில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டதா? தீவிரவாத அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டதா? என அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்