உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்625_500_560_350_160_300_053_800_748_160_70ஈராக் நாட்டில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சந்தைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈராக் தலைநகரான பாக்தாத்தில் தான் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளது.நகரின் மையத்தில் உள்ள al-Sinak என்ற பகுதியில் பல்பொருள்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்று அமைந்துள்ளது.புத்தாண்டு பிறக்க உள்ளதால் இச்சந்தையில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் அதிகளவில் கூட ஆரம்பித்தனர்.இந்நிலையில், கார் பாகங்களை விற்பனை செய்யும் கடைக்கு அருகில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.இத்தாக்குதல் நிகழ்ந்த சில வினாடிகளில் மற்றொரு பகுதியில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இக்கொடூர தாக்குதலில் 28 பேர் உடல்கள் சிதறி பலியாகியுள்ளனர்.மேலும், 50க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இத்தாக்குதல் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் இவரை இரண்டும் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருவதால் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் அமைப்பு இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்