உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஜேர்மனி நாட்டில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் ரூ.2 கோடி பேரம் பேசிய அகதி ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சிரியா நாட்டை சேர்ந்த 38 வயதான அகதி ஒருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி Saarbruecken என்ற நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதி ஒருவனை தொடர்புக்கொண்டு அகதி ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயார்.கார்களை வெடிகுண்டுகளாக மாற்றி இஸ்லாமியர்கள் இல்லாத மக்கள் மத்தியில் தாக்குதல் நடத்துவேன்.

ஆனால், இத்தாக்குதலை நடத்த தனக்கு 1,80,000 யூரோ(2,81,40,606 இலங்கை ரூபாய்) தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.குறுஞ்செய்தி அனுப்பும் டெலிகிராம் என்ற தளம் மூலமாக அகதி தீவிரவாதியை தொடர்புக்கொண்டதால் இது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே பொலிசார் அகதியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும், நபர் மீது தீவிரவாத குற்றச் செயல்களுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19-ம் திகதி ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்