உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்188 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய டூ பிரதர்ஸ் கப்பலின் உடைந்து போன பாகங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1823 ம் ஆண்டு கப்பல் தெற்கு பசிபிக் பகுதியில் மூழ்கியது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஜார்ஜ் போலர்டு மற்றும் அவரது குழுவினர் தப்பிக்க 3 படகுகளை பயன்படுத்தினர்.

அவர்கள் 2 மாதத்திற்கு மேலாகவும் கடலில் தத்தளித்தனர். அப்போது அவர்கள் உயிர் வாழ மனித மாமிசத்தை சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மற்றொரு கப்பல் மூலமாக அவர்கள் உயிர் பிழைத்தனர்.

188 ஆண்டுகளுக்கு பின்னர் கடல் சார் பரம்பரிய தொல்லியல் ஆய்வாளர்களும், தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகத்தினரும் டூ பிரதர்ஸ் கப்பலை ஹொனலுவின் வடமேற்கே 600 மைல் தொலைவில் கண்டுபிடித்துள்ளனர்.

டூ பிரதர்ஸ் கப்பல் நான்ட்டு கெட்மாஸ் பகுதியை சோ்ந்தது. இந்த இடம் அமெரிக்க திமிங்கில தொழில் துறையினரின் பிறப்பிடமாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்