உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மாங்குளம் இந்துபுரம் பகுதியில் கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கைதுசம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.2009 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில், வடக்கு மாகாணத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளதுடன், இதனால் பல்வேறு சமூக பிரச்சினைகள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 தசம் 6 கிலோக்கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரனையை மேற்கொண்டுவரும் மாங்குளம் பொலிசார் சந்தேகநபரை இன்று வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் எடுத்தச்செல்லப்பட்ட ஒருதொகுதி மதுபான போத்தல்கள் மாங்குளம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில் மறைத்து எடுத்துச்செல்லப்பட்ட அரச முத்திரை பொறிக்கப்பட்ட 750 மில்லி லீட்டர் அளவுடைய 84 மதுபான போத்தல்களும் 180 மில்லிலீட்டர் அளவுடைய 64 மதுபானபோத்தல்களும் தென்னம்சாராயம் 4 மற்றும் Bule safari 02 ஆகியவையே கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்