உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையினை வருடாந்தம் நினைவு கூறுவதன் ஊடாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்ற செய்தியை வெளி உலகிற்கு எடுத்துரைப்பதாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான 10 ஆம் திகதி கலந்து கொண்டவர்களில் 9 பேர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளினால் உயிரிழந்ததுடன் 50 பேர் காயமடைந்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி ஆகியவற்றினால் இந்த மரணங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் துாபியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களினால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்இ மறவன் புலவு சச்சிதானந்தத்தால் எழுதப்பட்ட தமிழாராய்ச்சி படுகொலைகள் எனும் நூலை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வெளியிட்டு வைக்க பதில் முதலமைச்சர் ஐங்கரநேசன் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அகிம்சை வழி முதல் ஆயுத வழி போராட்ட காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழீழ உணர்வுடன் உள்ள மக்களை ஒன்றிணைத்து புதிய யுத்திகளுடன் மாற்று வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே. கரிகாலன் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்