உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை அதிவேக புகையிரதம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் – சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூர் இடையே செல்லும் ஜக்தல்பூர்-புவனேஸ்வர் அதிவேக புகையிரதம் நேற்று பின்னிரவு  அருகே தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான புகையிரதம் செல்வதற்கு  சிறிது நேரத்துக்கு முன்னர் ஒரு சரக்கு  புகையிரதம் ஒன்று  இதே தண்டவாளத்தின் வழியாக சென்றுள்ளதாகவும்    தண்டவாளத்தில் வெடி சத்தம் போன்ற ஒரு ஓசை கேட்டதாகவும், அதன்பின்பே  இந்த புகையிரதம் கவிழ்ந்ததாகவும் விபத்துக்குள்ளான புகையிரதத்தின் சாரதி தெரிவித்துள்ளார். இதனால்  இந்த விபத்து நக்சலைட்களின் வேலையாக  இருக்கலாம் என   தொிவித்துள்ள காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்