உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவில் நுழைய 7 இஸ்லாமிய நாடுகளுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்ததை தொடர்ந்து கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளுக்கு அதிரடியாக தடை விதித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.சமூக வலைத்தளமான டுவிட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், ‘வழக்கு விசாரணை, உயிருக்கு அச்சுறுத்தல், தீவிரவாதம் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களை கனடா அன்புடன் வரவேற்கிறது.

நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் நாங்கள் அனுமதிப்போம், ஒற்றுமையே எங்களுடைய வலிமை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.கனடா பிரதமரின் இந்த கருத்தை வரவேற்று அவரது தகவலை இதுவரை சுமார் 3 லட்சம் பேர் வரை பகிர்ந்து வருகின்றனர்.இதுமட்டுமில்லாமல், டொனால்டு டிரம்ப் தடை செய்துள்ள நாடுகளின் குடியுரிமை மற்றும் கனடா குடியுரிமை ஆகிய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை ஏதும் இல்லை எனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்