உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் எதிர்கால திருப்பணிநடவடிக்கைகளிற்காகவும்,நிர்வாக நடவடிக்கைகளிற்காகவும்பொதுமக்களிடம் ஓர் கருத்துக்கணிப்பு வாக்கொடுப்பின்படி நடைபெறவுள்ளது.அதாவதுஎதிர்வரும் 05.02.2017(ஞாயிற்றுக்கிழமை) காலை 9:00 மணி தொடக்கம் மாலை 5:00 வரை ஊர் இளைஞர்களால் பனிப்புலம்,காலையடி,காலையடிதெற்கு,சாந்தை,கலட்டி, குஞ்சுசங்கலட்டி மற்றும் சில இடங்களில் வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு “பொதுமக்களால் நியமிக்கபடும் ஆலய நிர்வாகசபையையும் திருப்பணிசபையையும் விரும்ப்புகின்றீர்களா?அல்லது

ஆலய பூசகர்களிளனால் நியமிக்கப்படும் ஆலய நிர்வாகசபையையும் விரும்புகின்றீர்களா?” என வினாக்கொத்து மூலம் வாக்கொடுப்பு நடைபெறவுள்ளது. கடந்த 26-01-2017 ஆம் திகதி தொடக்கம் பேஸ்புக் “பனிப்புலம் உறவுகள்” எனும் குளுமத்தினூடாக எடுக்கப்பட்ட வாக்கொடுப்பின்படி “24நபர்கள் பொதுமக்களால் நியமிக்கபடும் ஆலய நிர்வாகசபையையும் திருப்பணிசபையையும் தேவை”எனவும்.

“8நபர்கள் ஆலய பூசாரகளினால் நியமிக்கப்படும் ஆலய நிர்வாகசபையையும் தேவை” எனவும் வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாக்கொடுப்பு நீதியாகவும், நடுநிலையையாகவும் நடைபெறும் ஒன்றாகும் இதற்கு ஊர்மக்கள் அனைவரினதும் பங்களிப்பை வேண்டுவதுடன் வெளிநாட்டு உறவினர்கள் ஊரில் உள்ள தங்கள் உறவினர்களை வாக்களிக்குமாறு பரிந்துரைக்கும் வண்ணம் ஊர் இளைஞர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்

இப்படிக்கு

ஊர் இளைஞர்கள

செய்திகள்

யெ.நிவர்சன

 

 

9 Responses to “பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலய எதிர்கால நிலை பற்றிய வாக்கெடுப்பு!”

 • Pann Ampal adiyar:

  பணிப்புல அம்பாள் விரும்பும் தீர்ப்பை அடியார்கள் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 • Niva:

  இரகசிய வாக்கொடுப்பு என்றால் யாருக்கும் தெரியாமல் நடைபெறுவது. இங்கு யாவாருக்கும் தெரியப்படுத்தப்பட்டே இக்கருத்து கணிப்பு நடைபெறவுள்ளது.

 • Niva:

  “சட்டவிதிகளுக்கு முரன்பட்டு” இது உங்களிற்கு பூசாரிகள் மீதுள்ள பயத்தின் தன்மையை காட்டுகின்றது

  • சி.சிவானந்தம்:

   தம்பி நிவர்ஷன்!
   எமதூர் மக்கள் எம்தாயின் பிள்ளைகள். பூசாரிமார்கள் யாரும் வேற்றூர்களிலிருந்து வந்தவர்களல்ல. எனக்கு அவர்கள் மீது பயமெதுவுமில்லை. எனது விருப்பம் ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்பதேயாகும். அண்மையில் நான் ஊருக்கு வந்தபோது நான் சந்தித்த பெரியோர்கள், பூசாரிமார்கள் ஆகியோரிடம் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றியே பேசியிருந்தேன். ஆனால் பலரும் * கஷ்டம்,முடியாது* என்ற இரு சொற்களில் மட்டுமே பதிலளித்தார்கள். இதனால் நான் உணர்ந்துகொண்ட விடயம் எமதூர் மக்கள் மரபுவழி அறியாமைக் குறைபாடுகளை தொடர்ந்தும் பின்பற்றி எதிர்மறைச் சிந்தனைகளை வளர்த்து வருகிறார்கள் என்பதாகும்.இதற்கு மக்கள் மத்தியில் ஆன்மீகத் தெளிவினை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதற்கான ஒரே வழி ஆலய விழாக் காலங்களில் விழா உபயகாரர்கள் பல இலட்சங்களைக் கொடுத்து பல கூட்டம் மேளங்களை அழைப்பதை விடுத்து சில ஆயிரங்களைச் செலவு செய்து ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், பண்ணிசைக் கலைஞர்கள், வில்லிசை, மெல்லிசைக் கலைஞர்கள், யோகா,தியான கலைஞர்கள் முதலியோரை வரவழைத்து மக்களுக்கு நல்லறிவூட்டும் நல்நிகழ்ச்சிகளை நடாத்த முன்வர வேண்டும்.

   எனவே,தம்பிகளே! சிந்தித்து செயற்பட்டு,ஒற்றுமையேற்பட ஒன்றுபட்டு உழையுங்கள்.

   நன்றி!

   • Jeganathan Nivarsan:

    அந்த ஒற்றுமையைதான் நாங்களும் விரும்புகின்றோம்

 • சி.சிவானந்தம்:

  மேற்படி விடயம் சம்பந்தமாக குணதிலகம் அண்ணர் சிறப்பாக விளக்கியுள்ளார். அவருடைய கருத்தினை ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கொண்டு செயற்படுவதே நன்று.

  ஓரூர்,ஓர்குல மக்களிடையே,குலதெய்வத்தின் ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக மக்களை இருவேறு பிரிவுகளாகப் பிரித்து இரகசிய வாக்கெடுப்பு நடாத்துவதென்பது ஊர் மக்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட வேண்டிய விடயமாகும். இத்தகைய செயற்பாடானது மக்களிடையே மென்மேலும் ஒற்றுமையீனத்துக்கே வழிவகுக்குமன்றி பயன்பாடெதையும் தந்துவிடாது. மேலும், வாக்கெடுப்பு நிகழ்வு தன்னிச்சையாகத் தனிநபர்களால் நடாத்தப்படுமாயின் அரச சட்ட விதிகளுக்கு முரண்பட்டதாக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுவிடும்.

  எனவே,மேற்படி விடயத்தில் அனைவரும் தாயிடம் வேண்டுதலை வைத்து, எம் தாயின் பிள்ளைகளாக,எம்மிடையே காணப்படும் மும்மல பேதங்களை புறத்தொதுக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் செயலாற்றுவதே சாலச் சிறந்ததாகும்.

  நன்றி!

  ஓம் சக்தி ஓம்!

 • Niva:

  கடந்த காலங்களில் நாங்களும் அவர்களும் என்றிருந்து என்ன பயன்? வாக்கொடுப்பு மீது சந்தேகப்பட காரணம் என்ன?

  • kunathilagam santhai:

   நான் என்றும் அமைதியை விரும்புபவன் .இது பாரிய பிரச்சனைகளைக் கொண்டு வரும் என்பதே என் கருத்து .இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளே ஒன்று சேர்ந்து தேசிய அரசு அமைக்க வில்லையா ?நாம் ஏன் ஒன்று சேர முடியாது ?எம்மிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை வேண்டும் .இது என் தாழ்மையான கருத்து .

 • kunathilagam santhai:

  வணக்கம் .
  ——–
  இளைஞர்களின் முயற்ச்சிக்கு என் பாராட்டுகள் .ஆலைய வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு .எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை .ஆனால் அனைவரும் ஒற்றுமையாகச் செயல் பட வேண்டும் .இங்கு வாக்கெடுப்பு இரு கோணத்தில் காணப் படுகிறது .இது வெட்டொன்று துண்டு இரண்டு என்பதுபோல் உள்ளது .இந்த வாக்கேடுப்பால் பயன் உண்டு என்று எனக்குத் தெரியவில்லை .இது எம்மிடையே உள்ள விரிவை மேலும் கூட்டுமோ என்ற அச்சமே .இங்கு நானா அல்லது நீயா என்பது போல் உள்ளது இவ் வாக்கெடுப்பு .இதை நடாத்துபவர்கள் நம்பிக்கைக் குரியவர்களா என்பது இன்னுமொரு பிரச்சனை .பெரும்பாலும் இவர்கள் ஒருபக்க சார்புடையவர் களாகவே இருப்பார்கள் .எனவே இப்படியான செயல்முறைகள் நடுவர்கள் முன்னிலையில் நடைபெறுவதே முறை .இன்னும் உங்கள் கோரிக்கையுடன் மூன்றாவதாக நானா ?நீயா ?நாமிருவருமா ?என ஒரு கோரிக்கையை சேர்ப்பது நல்லது .காரணம் எல்லோரும் இந்த இரு கோரிக்கைக்கும் பதில் தருவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது .நடுநிலையாளர்களும் எம்மிடையே இருப்பார்கள் .
  பிரச்சனையை மேலும் வளர்ப்பது எமது வளர்ச்சிக்குப் பாதகமே ஒழியச் சாதகமாக இருக்காது .சிலவேளை இது எம்மைக் கடந்த காலத்துக்கு பின்னோக்கி அழைத்துச் செல்லவும் வாய்ப்புண்டு .இங்கு சில தனியார் பிரச்சனைகளும் பின்புலமாக உள்ளது .இவர்களின் சுயநலத்துக்கு துணை போகாது பொது நலத்தோடு பயணிக்க வேண்டிய தேவை உள்ளது .
  அன்பர்களே ,தயவு செய்து நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட இருபகுதியாரும் விட்டுக் கொடுப்புடன் செயல்பட்டு நெருக்கடியைத் தீர்ப்போம் எனக் கேட்டுக் கொள்கிறேன் .
  இது என் அறிவுக்கெட்டிய கருத்து .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்