உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


16.02.2011 அன்று மறுமலர்ச்சி மன்றத்தின் மகளிர் கழகம் ஆரம்ப கூட்டம் மன்ற தலைவர் அழ பகீரதன் அவர்களின் வழிப்படுத்தலுடன் காலை 9 மணிக்கு நடைபெற்றது. மன்ற செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்துவதுடன் மன்ற அபிவிருத்தி திட்டத்தின் பயன்களை பெறும்வகையிலும் செயற்படுத்தும் வகையிலும் மன்ற மகளிர் கழகம் அமையும் எனவும் எதிர்வரும் 8.3.2011 அன்று மன்றத்தில் மகளிர் நிகழ்வை நடாத்த வேண்டும் எனவும் அழ. பகீரதன் எடுத்துக்கூறினார். தொடர்ந்து மன்றத்தின் மகளிர் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதனை பங்குபற்றிய மகளிர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு கழகத்தின் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகள் விபரம்

தலைவர் : செல்வி சுதா மகாராசா

செயலாளர் : செல்வி ஜீவனா சுப்பிரமணியம்

பொருளாளர் : செல்வி கிருஸ்ணவேணி விக்கினேஸ்வரமூர்த்தி

உபதலைவர் : செல்வி தட்சாயினி விஜயசிங்கம்

உபசெயலாளர்: செல்வி ஜெயராணி சதாசிவம்

நிர்வாக உறுப்பினர்கள் : செல்விகள் யசந்தா கனகலிங்கம், ந‍தியா கிரிதரன், சிந்துஜா ஞானசேகரன், கார்த்திகா வரதகுலசிங்கம், இந்துஜா ஜெயக்குமார், மிறோஜினி செல்வகுமார், பிருந்தா தேவராசா, சிவறஞ்சினி பரமானந்தன், தட்ஷாயினி தெட்சணாமூர்த்தி, தினியா திருச்செல்வம், சண்முகப்பிரியா யோகநாதன், லசிந்தா ஜெகதீஸ்வரன், கல்பனா சுப்பிரமணியம்

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் ஏனைய மகளிரையும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முதல்கட்டமாக கணனி வகுப்புகள் ஆரம்பிப்பது பற்றியும் அதற்கு தற்போது உள்ள கண‍னி அறையை பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 20 பேர் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு ஐந்து கண‍னிகள் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆங்கில வகுப்பு பாடசாலை பிள்ளைகளுக்கு முதலாந்திகதியிலிருந்து ஆரம்பிப்பதாகவும் அதற்கு ஆசிரியைக்கு கிழமைக்கு 4 வகுப்புக்கள் மாதம் 3500 ரூபா சம்பளமாக வழங்கு வதற்கும் பிள்ளை ஒருவருக்கு ஆண்டு கட்டணமாக 250 ரூபா பெற்றுக்கொள்வதற்கும் மன்றம் ஆசிரியருக்கான சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.

பேச்சு ஆங்கிலம் மகளிருக்கான வகுப்பு ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதற்கு மாணவர் கட்டணம் செலுத்தப்படவேண்டும் எனவும் குறைந்த்து 20 பேர் கற்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப் பட்டது. பௌர்ணமி தோறும் ஒன்று கூட வேண்டும் எனவும் புத்தகப்பண்பாடு பற்றியும் கலந்துரையாடல் நடாத்தவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

தகவல் : அழ பகீரதன்

3 Responses to “மறுமலர்ச்சி மன்றம்>>மகளிர் கழகம்”

 • T.BALA:

  மன்றத்தின் மகளிர் அமைப்பு உருவாக்கம் ஆக்கபூர்வமானது.இவர்கள் அமைப்புக்கு என் வாழ்த்துக்கள்.மகளிர் அமைப்பு தங்கள் சுய சிந்தனைகளுடன் அமைப்பை கொண்டுநடாத்துவதே அந்த அமைப்புக்கான வரவின் பலனை அடையமுடியும்.மற்றவர் அதாவது ஆண்கள் தம் தலையீடுகள் தவிர்க்கும் போதே ஆண் ஆதிக்க சிந்தனைகள் அங்கு நுளையாது.அமைப்பின் வளர்ச்சிக்காய் புலம் பெயர் பெண்கள் தங்கள் பங்கை வளங்கவேண்டும். பாலா

 • Selvarajah K.:

  அம்பாள் துணை. மறுமலர்ச்சி மன்றத்தின் மாதர் மறுமலர்ச்சிகு வாழ்த்துக்கள். வாழ்க மன்றத்தின் தொண்டு. வளர்க மறுமலர்ச்சி மன்றம்
  அன்புடன் இராசன்.

 • அடித்த காற்றில் இலை உதிர்ந்தமரம் போல் மௌனமாக இருந்த மறுமலர்சி மன்றம் மீண்டும் தளிர் விட ஆரம்பித்து விட்டது .தங்கள் திட்டங்கள் அனைத்தும் எந்தவித தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார் .வாழ்க வளர்க மென்மேலும் ஓங்குக உதிர்ந்த இலைகளே!!! நீங்களும் பசளையக இருப்பீர்களா?
  அன்புடன், நா.சிவாஸ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்