உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இந்த படத்தை ‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் ஏவிஎம், ஸ்டுடியோ கிரீன்  நிறுவனங்களிலும், இயக்குனர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்தவர்.இதில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடிக்கின்றனர். சந்தீப் ஜோடி  யாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமா காதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹ ரீன் நடிக்கிறார். இவர் இந்த  படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதா நாயகியாக அறிமுகம் ஆகிறார்.“வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜே.லஷ்மண் மீண்டும் இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். முதல்  முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்துபணியாற்றி உள்ளார்.
வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு- காசி விஸ்வநாதன், கலை- சேகர்,  நடனம்- ஷோபி. இந்த படத்தின் தலைப்பை ஜெயம்ரவி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இது ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்