உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்//people.panipulam.net/#!album-634

One Response to “சுழிபுரம் வடக்கு ,ஶ்ரீ காடேறி ஞானவைரவர் ஆலய கும்பாபிசேக மண்டலாபிஷேக பூர்த்தி விழா 108சங்காபிஷேகத்தின் புகைப்படங்கள் 17-02-2017”

 • சி.சிவானந்தம்:

  இந்த ஆலயத்தின் வெளித்தோற்றம் இவ்வளவுக்கு அலங்காரத் திருப்பணி செய்யப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.ஆனால் ஆலயத்தின் புறத் தோற்றத்தை அழகுபடுத்திய அடியவர்கள் மூலவர் கருவறையைச் நீரினாலாவது கழுவி சுத்தம் செய்யத் தவறியதேன்? மூலவர் விளக்குகள்கூட பலகாலமாக சுத்தம் செய்யப்படாதவையாக பச்சை செழிம்பு படிந்து காட்சி தருகின்றன. கும்பாபிஷேகத்துக்காகவேனும் ஆலயத்தின் உட்புறத்தையும்,விளக்குகளையும் நீரினால் கழுவி தூய்மைப்படுத்தியிருக்கக் கூடாதா?

  ஆலயங்களை தற்காலப் பணபலத்தால் பெரியளவில் அழகுறக் கட்டுவதால் பலனெதுவும் கிடைக்காது. தூய இறைபக்தியுடன் ஆலயத் தூய்மையைப் பேணிப் பாதுகாத்து வழிபட்டாலோ அல்லது ஓரிடத்தில் ஒரு கடவுள் படத்தை வைத்து கூட்டுப் பிரார்த்தனை வழிபாடு செய்தாலோ இறைவன் அருள்பாலிப்பார்.
  இறைவன் ஒருபோதும் பணத்திற்கோ,அழகுக்கோ,ஆடம்பரத்துக்கோ மயங்கமாட்டார். அகத் தூய்மைக்கே அருள்பாலிப்பார்.

  ஊர் மக்கள் பலரும் அறியாமை காரணமாக எமதூரிலுள்ள ஆலயங்களின் புனருத்தாரணப் பணிகளில் ஆகம விதி முறைகளை அறியாது தத்தம் சுய விருப்பங்களிற்கு ஏற்றாற்போல் செயற்பட்டு பல வரலாற்றுத் தவறுகளைச் செய்து வருகின்றமையானது மக்களுக்கு (எதிர்காலச் சந்ததியினருக்கு) பல இன்னல்களும், அணையாத அயலூரார் நையப்புடைப்புகளும் வளர்வதற்கு ஏதுவாக அமைந்து வருவதை அனைவரும் உணர்ந்து ஒற்றுமையாக அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

  ஓம் பைரவாய போற்றி!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்