உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கொள்ளு குழம்பு

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 200 கிராம்,

பெரிய வெங்காயம் – 200 கிராம்,

தக்காளி – 200 கிராம்,

பச்சைமிளகாய் – 5,

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 10 பல்

கடுகு – அரை ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 100 கிராம்,

காய்ந்தமிளகாய் – 5,

மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,

புளி – 50 கிராம்,

நல்லெண்ணெய் – 200 மி.லி.,

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை : வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். நறுக்க வேண்டாம். கொள்ளை நன்கு சுத்தம் செய்து வாசனை வரும்வரை வறுத்து, வேக வைத்து கொள்ளவும். தாச்சியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்த பின் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்த கொள்ளை, தேவையான அளவு உப்பு போட்டு குழம்பு திக்கான பதம் வரும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கடைசியாக குழம்பை இறக்கும் போது கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.  சுவையான கொள்ளு குழம்பு ரெடி.

 

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்