உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இளம் பொறியியலாளர் தனது நண்பருடன் ,கான்சாஸ் என்ற பகுதியில் உள்ள மதுவிடுதிக்கு சென்ற போது அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல்,இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சமீபத்தில் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களுக்கு எதிராக,அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டு வந்த கருத்துகளே இது போன்ற சம்பவங்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.”கான்சாஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் யூத மையத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது போன்ற சம்பவங்களுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இது போன்ற செயல்களை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.”என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியரை சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்,ஸ்ரீனிவாசை மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர் என நினைத்து தவறுதலாக சுட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்