தமிழில் எழுத
பிரிவுகள்


கடந்த 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோமாலியா மார்செக் அலபாமா வர்த்தக கப்பலை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை யு.எஸ் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவரை உயிருடன் பிடித்தனர். இந்த கொள்ளையரான அப்டி வாலி அபிதாகிர் மியூஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

தனது நிகழ்விற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார். அந்த நபருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை காலத்தை 27 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மியூஸ் வழக்கறிஞர்கள் கோரினர்.

நியூயார்க்கில் பெடரல் கோர்ட்டில் விசாரணையாளர்கள் பிடிபட்ட மியூசை கொள்ளை கும்பலின் தலைவர் என தெரிவித்தனர். சோமாலிய கொள்ளை கும்பல் மார்செக் அலபாமா வர்த்தக கப்பலை சோமாலியா கடற்கரை பகுதியில் இருந்து 450 கி.மீ தொலைவில் கைப்பற்றினார்கள்.

யு.எஸ் மாவட்ட நீதிபதி லோர்டா பிரஸ்கா விவரிக்கையில் கடற்கொள்ளையர்கள் கொடூர சிந்தனையாளர்கள் என்றார். மார்செக் அலபாமா கப்பலில் ஏறிய முதல் நபர் மியூஸ் ஆவார்.

அவர் தனது ஏ.கே 47 துப்பாக்கியால் கப்பல் கெப்டன் பிலிப்பை தாக்கினார் என அரசு வழக்கறிஞர் கூறினார். மார்செக் அலபாமா உணவு உதவி பொருட்களை ஏற்றி சென்ற போது கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்