தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


சீனாவைச் சேர்ந்த லீபூ என்பவர் தனக்கு அடிக்கடி தலைவலிப்பதாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற சென்றார். அவருடைய தலையை ஸ்கேன் செய்து பார்க்கையில் அவருடைய தலையில் கத்தி இருந்தது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவரிடம் இது குறித்து விசாரித்தனர்.

இதுகுறித்து விளக்கிய லீபூ,

தான் 2006ஆம் அண்டு யுன்னான் புரோவின்ஸ் (சீனா) பகுதியில் சென்றபோது வழப்பறி கொள்ளையர்களால் கத்தியால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து லீக்கு அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்ற டாக்கடர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்றினார்கள்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கத்தியுடன் 4 ஆண்டுகள் இருந்தது மிக அரிதான ஒன்றாகும். தன்னுடைய பணிக்காலத்தில் இதுபோன்ற ஒரு பாதிப்பு அடைந்த ஒருவரை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்