உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்பவர்ஸ்டார் சீனிவாசன் தமிழ்சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். நடிகர் சந்தானத்துடன் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.தற்போது 1000 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் பணமாக 10 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று திலிப் பத்வானி என்பவர் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் பவர்ஸ்டார் சீனிவாசனை சென்னை வந்து கைது செய்துள்ளனர். கைது செய்த அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஏற்கனவே கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ஆந்திரா தொழிலதிபர் ஒருவர் புகார் கூறினார்.

20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து புகார்கள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கபட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்