உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரான்ஸில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது 24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்ததுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் வந்திறங்கிய நிலையில் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைதிற்கான காரணம் தெரியவில்லையெனசும் வெிமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்